பக்கம்:சுயம்வரம்-மீரா.pdf/120

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காதலுக்குப் பல முகங்கள் ஹெலன் ஷெப்பீல்டு தமிழில் காதலுக்கு பல முகங்கள் வெட்கத்தோடு வளரும் வசந்த காலப் பூக்கள் போல ஒடையிலே கூடுகிற சிறிய நீர்த்திவலைகள் போல எண்ணற்றவை கவனமாக அவற்றுள்ளே நோக்கினால் உனது முகத்தையே காணலாம் நீ. நான் பால்யமாய் இருந்தபோது காதலின் முகம் புதிதாக வாலிபத்தின் பனிமூட்டத்தோடு அதிசயங்கள் நிரம்பி சரியாக - எனது முகம் போலவே இருந்தது. நான் இளமையாய் இருந்தபோது

தமிழ்நாடன்

செம்பழுப்புக் கூந்தல் ஒளிரும் கற்றையாய் எனது வெல்வெட் தோள்களின் மீது சொரிய காதலின் முகம் எனது முகம் போலவே இருந்தது சரியாய். நாம் பதினேழு வயதாயிருந்த போது அங்கே வார்த்தைகள் இல்லை. அந்தப்புன்னகைக்கும் கோடையில் ஒருநாள் ஒரு குன்றின் மீது ஏறினோம் நமது காதலைப் போலவே இளமையும் பசுமையும் நிறைந்திருந்த ஒரு மரத்தின் கீழே அமர்ந்தோம். போதுப்பூக்கள்; செங்காய்ப் பழங்கள்; அவை, நமக்குத் தீர்க்கதரிசியாகவும் II9