பக்கம்:சுயம்வரம்-மீரா.pdf/122

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வட்டத்தை நாம் கண்டுவிட்டபோது என்றென்றும் அது நீடிக்கும் என்றும் மீண்டும் ஒருபோதும் தனிமையில் இரோம் என்றும் அறிந்தபோது நாம் எழுந்தோம், கையோடு கை இணைத்துப் புல் வெளிலே நடந்தோம். ஒரு நீரோடையில் ஒருவரை ஒருவர் குளிப்பாட்டினோம். பிறகு, சேற்றின் மீது விழுந்தோம். நிரம்பவே கொடுத்தாயிற்று என்ற . ஆச்சரியத்துடன், மீண்டும் காதல் கொண்டோம். நம்மீது ஒளிர்ந்த சூரியனைப் போல வெப்பமும் பொன்னிறமுமான ஒரு கோடைப்பருவக் காதல் நமது. குளிர்காலம் வந்தது. உடன்போர் வந்தது. அது நம்மைச் சில்லிட வைத்தது நமது செளந்தர்யக்கனவு உறைந்து போயிற்று. அந்நிய ஆசியக் கடற்கரைகளிலிருந்து அதனை சூடாக்கமுடியவில்லை. நம்மால் நாம் முயற்சித்தும் கூட. பிறகு, ஒரு சகதி தோய்ந்த அழுக்கு நாளில் அவர்கள் சொன்னார்கள் 'நீ இறந்து போனாய்' என்று. 2 காதலுக்குப் பல முகங்கள் இலையுதிர் காலத்தில் பொன் நிறமாய் மாறும் இலைகள் அல்லது பூமியில் வளரும் புல்லின் இதழ்கள் எத்தனையோ அத்தனை. அன்போடு, இவற்றுள்ளே நோக்கினால் உனது முகத்தையே காணலாம் நீ. அக்டோபர் மாதம் ஒன்றாய் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தோம் நதிக்கரை மீது இந்த நதி இத்தனை வேகமாக எங்கே }2I