பக்கம்:சுயம்வரம்-மீரா.pdf/150

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அந்தத் தேவாலயங்களுக்குச் செல்ல அனுமதி மறுப்பு. அங்கெல்லாம் போற்றப்படுவது கிறிஸ்துவம் அல்ல வெள்ளை இனம். இப்படிச் சொல். ஏசுவே, நீ அங்கு சிலுவையில் அறைந்து கொல்லப்படுவாய். ஏசுபிரான் வகுத்த வழியிலிருந்து உலகம் விலகிச் சென்று விட்டது. நிறவெறிக் கோட்பாட்டின் மூலம் கிறிஸ்துவ மதத்தைக் குழி தோண்டிப் புதைக்கும் போலிப் பாதிரிகள் இன்று தேவாலயங் களில் கோலோச்சுகின்றனர். வறுமையை, நிறவெறியை உலகத்திலிருந்து விரட்ட கிறிஸ்துவ மதம் தவறிவிட்டது. அவர் வாழ்ந்த காலத்தில் ஏசுபிரான் அற்புதங்கள் நிகழ்த்தி இருப்பார். அது உண்மை. ஆனால் இறை உணர்வு அற்ற இன்றைய சமுதாயத்தில், வியாபார நோக்கம் கொண்டு இயங்கும் இன்றைய சமுதாயத்தில் மறுபடியும் அற்புதங்கள் நடத்த ஏசுவினால் இயலாது. இந்த உலகத்தைவிட்டு "போ' 'போ என்று ஏசுவைப் பார்த்துக் கவிஞன் கூறுகிறான்: ஏசுவே, நீ என் வார்த்தைக்குச் செவிமடுப்பாயாக. நீ வாழ்ந்த நாட்களில் அற்புதங்கள் செய்தாய். நான் கணக்கிடுகிறேன். ஆனால் அந்த நாள் இன்று போய்விட்டது. அவர்கள் உன்னைப்பற்றிக் கதை ஜோடித்து அதற்கு பைபிள் என்று பெயரிட்டனர். அந்த பைபிள் இன்று செத்துவிட்டது. போப்பாண்டவர்களும் போதர்களும் பெரும் பணம் சம்பாதித்துவிட்டனர். மன்னர்களுக்கும், தளபதிகட்கும் கொள்ளையருக்கும்-கொலைகாரர்கட்கும் உன்னை விற்றுவிட்டனர். உன்னை அடகு வைத்து விட்டனர். போய்விடு. ஏசுவே, கிறிஸ்துவே, தேவனே, தெய்வமே, ஜிகோவாவே இங்கிருந்து இப்பொழுதே போய்விடு வழிவிடு, மதச்சார்பற்ற புதிய நண்பனுக்கு வழிவிடு அந்தப் புதிய நண்பன் பெயர்