பக்கம்:சுயம்வரம்-மீரா.pdf/157

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மேற்கே விடிந்த அந்த நாளில், மக்களெல்லாரும் உதடுகளாலன்றி மனங்களால் உரையாடினார்கள். துப்பாக்கிகள் விரல்களாலேயே சுட்டுத் தள்ளப்பட்டன. 女 அதிசயமாய் அன்று எங்கள் அரசியல்வாதிகளுக்குத் தொண்டை கட்டிக்கொண்டது சினிமாத் தியேட்டர் மூட்டைப் பூச்சிகள் உண்ணாவிரதமிருந்தன கல்லூரி மாணவர்கள் காதலிக்காமல் கல்லெறியாமல் கையை உயர்த்திக் குரல் கொடுக்காமல் ஆசிரியருக்குப் பணிந்து வகுப்புக்குள் போனார்கள். 女 அதியற்புதமான அன்றைக்குத் தான் எங்கள் பத்திரிகைகளில் கவிதைகளே இல்லை. வெள்ளைச் சுவர்களில் நோட்டீஸ் ஒட்டுங்கள் விளம்பரங்கள் அன்று தான் தங்கள் சரக்குகள் மட்டமானவை என ஒத்துக் கொண்டன. ரேடியோவில் . வானிலை அறிக்கைப்படி மழை பெய்தது 女 பசியும் பயமும் நோயும் கவலையும் அகராதிக்குள் அடங்கிப் போயின நீதி மன்றங்கள் வெறிச் சோடிக் கிடந்தன் கோவில்களில் சிலைகளுக்குப் பதிலாக மனிதர்கள் குடியேறியதும் அன்றைக்குத்தான். பிரம்மன். Δ I55