பக்கம்:சுயம்வரம்-மீரா.pdf/16

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அட... கெழட்டு எழவே... உனக்கு இதுவேற கேக்கா... கேக்குங் கேக்கும். மென்று எடக்குப் பண்ணுகிறாள். தள்ளிவிட்டு கிச்சணங் காட்டி உருட்டினாள். ஒ கெங்கம்மா... ஒ கெங்கம்மா.... விட்ரு. விட்டுரு... மூச்சுத் திணறியது. உருண்டு உருண்டு சிரித்தார். 'நல்லாத்தான் கொஞ்சுரயா கொணந்தானா...' என்று பெருமூச்சு விட்டாள் கெங்கம்மாபாட்டி. வீட்டுக்குள் எப்போதும் குருவி தின்னத் தானியம் சிந்திக் கிடக்கும். கெங்கம்மாளுக்குத் தெரியாமல் சக்கிலியக்குடி ஆட்களுக்கு சோளத்தை பெட்டியில் அள்ளிக் கொடுத்து... ஏலே... சம்மதம் தானலே. திருப்பி என்னக்கி கொண்டாரயோ.... சாமிநாயக்கன் வீடுதேடி கொண்டாலே. வேலு திருனையில் துணைப்பிடித்துக்கொண்டு நின்றான். கோட்டி எளவுகளா உலகம் போற போக்கு தெரியலை. எம்புட்டு ஈகெ. கெழட்டு எளவுகளுக்கு தானியத்த பூட்டி வக்க முடியல. சட்டி எடுக்கத்தான் போரெ. கெழவா.... - - வேலுத்தேவன் வாக்கு அரட்டியது. அடே... சிருக்கி மகனே... என்னடா... உனக்கு... அருவாளக் காமிச்சிக்கிட்டே... திரி.... சொன்னா கேப்பயா. எனக்கு புத்தி சொல்ல வந்திட்ட". . "தாத்தா நீயிதானெ சொன்ன... கமலைத்தோட்டத்த எம்பேர்ல எழுதி வக்யப்போரேன்னு. நீ சொன்ன... மண்டையை சிலுப்பிக் கொண்டு கூறாய் பேசினான். என்னடா நீயி... நான் ஒன்று கேட்டா நீ ஒன்னு கேக்க..., அடே அய்யா... காயம் உள்ள வரைக்கும் தானலே ஆட்டம் பாட்டம் எல்லாம். போகும் போது என்னத்தலே அள்ளிட்டு போகப்போரெ. இல்லாததுக என்னடா செய்யும்.... வேலு.... இருக்கப்போயித்தான கொடுத்தேன். ' - - வேலு கரண்டு போய் முழித்தான். தாத்தா பெரிய்ய கர்ண பரம்பரை மாதிரி பேசுரயே... என்ன கெதிக்க ஆகப் போரயோ தலையில் அடித்துக் கொண்டான் வேலு. 'பய எப்பிடி பேசுரான். எம்புட்டு லாயக்கா பேசுரான். மொளச்சி இலை விட முந்தி இந்த வரத்து வாரானே...' - 15

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுயம்வரம்-மீரா.pdf/16&oldid=463920" இலிருந்து மீள்விக்கப்பட்டது