பக்கம்:சுயம்வரம்-மீரா.pdf/38

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விக்ரமாதித்தன், எறங்கினஒடனே வேதாளம் பேச ஆரம்பிக்கும். அது தான் எனக்கு தெரிஞ்ச விக்ரமாதித்தன் கதை. நீ என்னடான்னா ஏதோ ஒருகாட்டு மரத்துலே ஏறிக்கிட்டு நாடகத்துக்கு வேஷம் கட்டிக்கிற மாதிரி கட்டிக்கிட்டு, நான் வேதாளம்னு சொன்னா நம்ப நான் என்ன முட்டாளா? வேதாளம்:- இதையெல்லாம் விளக்கமாச் சொல்ல இப்ப நேரம் இல்லே! இந்த முருங்கமரம், முருங்கக்காயி சமாச்சாரம் எல்லாம் இப்ப அவுட்டேட் ஆயிடிச்சி! அதுனால ஒங்க கண்ணுக்குத் தெரியற மாதிரி ஏதாவது ஒரு உருவம் வேணுமே! இல்லாதபோனா நம்ப மாட்டீங்களே! அதுனால... இளைஞன்:- சரி சரி! போதும் நிறுத்து. ஒன் கதையெல்லாம் கேக்கற நெலையிலே இப்பநான் இல்லே! எனக்கு என் பிரச்னை தலையை ஒடைக்குது. காசு குடுத்தாலும் வேணாங்கறே! பின்ன என்னதான் வேணும்! என் உயிரை எடுக்கறியா? எடுத்துக்க.. நிம்மதியாப் போயிடும். வேதாளம்:- ஒன் உயிர் எனக்கு எதுக்கு? இப்ப நான் ஒனக்கு ஒரு கதை சொல்லப்போறேன். அதைக் கேட்டுப்பிட்டு ஏன் இப்பிடி யெல்லாம் நடக்குது, இதுக்கு யார் காரணம்னு சொல்லணும்! சரியான பதில் சொல்லல்லேன்னா ஒன் தலை சுக்கு நூறா வெடிச்சுப் போயிடும்....! இளைஞன்:- அதுசரி! நீ எதுக்கு எனக்குக் கதை சொல்லணும்! அதெக் கேட்டுப்புட்டு சரியான பதில் சொல்லலைனா என்தலை ஏன் வெடிக்கணும்? இது என்ன தலை எழுத்தா? வேதாளம்:- அதெல்லாம் எனக்குத் தெரியாது! لیئےlgi[ என்னோட பழக்கம்! ஆனானப்பட்ட விக்கிரமாதித்தனையே விட்டு வைக்கல்லே. நீ எம்மாத்திரம் நான் நெனச்சா ஒன்னைக் கொசுவை நசுக்கற மாதிரி நசுக்கிப்பிடுவேன். இருந்தாலும் ஒன்னோட புத்திக் கூர்மையையும் சோதிச்சுப் பாக்கலாமேன்னு ஒரு ஆசை.... இளைஞன்:- சரி ஒன்னோட ஆசையையும் கெடுப்பானேன்! ஆனா ஒரு கண்டிஷன்: - வேதாளம்:- என்ன? என்கிட்டயே கண்டிஷனா? அதெல்லாம் நடக்காது! - 37

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுயம்வரம்-மீரா.pdf/38&oldid=463943" இலிருந்து மீள்விக்கப்பட்டது