பக்கம்:சுயம்வரம்-மீரா.pdf/54

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அரசியல்:- ஆமாம். நானுங் கேள்விப்பட்டேன். என்ன ரொம்பத் துள்ரானாமே. அன்னிக்கி அப்பிடித்தான் நமக்கு வேண்டிய ஒருத்தருக்கு வேலை போட்டுக் குடுன்னு சிபாரிசுக் கடிதம் குடுத்தனுப்பிச்சா, அதெல்லாம் முடியாது, எல்லாம் மொறைப்படிதான் நடக்குமின்னு வேறை வேலையைப் பாருன்னு திருப்பியனுப்பிச்சிட்டானாம். என்ன திமிர் அவனுக்கு. என்ன யாருன்னு அவனுக்குத் தெரியாததுபோல இருக்கு. தண்ணியில்லாத காட்டுக்கு மாத்திடுவேன்னு சொல்லிவை. - வியாபாரி:- அது கெடக்கட்டுங்க! நீங்க போயி டாக்டரைப் பாருங்க. அரசியல்:- அப்ப நான் வரேன் செட்டியாரே.(போகிறார்கள்) வியாபாரி:- (போனபின்) யோவ் இதோ போறானே இவன ஒனக்குத் தெரியுமா? எட்டு வருசத்துக்கு முன்னால என் கடையிலே பொட்டலம் கட்டிக்கிட்டு இருந்தான்....ம்... இப்பப்பாரு இவன் தயவுல என் காரியம் ஆகறமாதிரி என்தலை எழுத்து ஆயிப் போயிடிச்சி!... ஏன் ஒம்பொழைப்பு மட்டும் என்னவாம்? பெரிசா என்னமோ எம்.எஸ்.ஸியாமே! அதெப் படிச்சுப்புட்டு கடைசிலே இவன் தயவுலதானே ஒரு குமாஸ்தா வேலை கெடச்சது! அரசு:- தயவு என்ன? சும்மாவா வாங்கிக் குடுத்தான்? சொளையாப் பத்தாயிரம் ரூபாய் லஞ்சம் வெச்சுத்தானே அந்த குமாஸ்தா வேலையும் கெடச்சுது? அதைப்பொரட்ட எவ்வளவு கஷ்டப்பட்டேன்னு எனக்குத்தானே தெரியும்? வியாபாரி:- ஒகோ! அதுவும் அப்பிடியா? நானுந்தான் லசலட்சமாய் மொதல் போட்டு வியாபாரம் பண்றேன். இருந்தாலும் இவனுங்களோட தயவு வேண்டியிருக்கு எந்த ஒரு வேலையி னாலும் ஒரு தகுதி வேணும்! எந்த ஒரு தகுதியும் இல்லாம வெறும் வாய் பேச்சை மட்டுமே வெச்சுக்கிட்டுக் காலம்தள்றது இவனுங்க ளால மட்டுந்தான் முடியும்....ம்.... அவன் அதிருஷ்டம்....! சர்னு மேல போயிட்டான் அரசு:- நீங்க என்ன புதுசாச் சொல்லிப்புட்டீங்க? இதையே தான் பேரறிஞர் பெர்னாட்ஷான்னு ஒருத்தர் சொல்லி யிருக்கார்? - வியாபாரி:- என்ன ஷா?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுயம்வரம்-மீரா.pdf/54&oldid=463960" இலிருந்து மீள்விக்கப்பட்டது