பக்கம்:சுயம்வரம்-மீரா.pdf/57

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அவனை மானத்தை வாங்கல்லே. (ஆவேசமாக மேசையைத் தட்டுகிறார்.) டாக்டர்:- என்ன நீங்க? ரொம்ப உணர்ச்சிவசப்படlங்கு, இது சட்டசபை இல்லீங்க இது ஆஸ்பத்திரி. காலுல செருப்பு வேறே போட்டுக்கிட்டு வந்திருக்கீங்க. எதுக்கும் இனிமே ஆஸ்பத்திரிக்கி வரப்போ இதெல்லாம் வேணாங்க எனக்கும் பயமா இருக்கு. அரசியல்:- என்ன நீங்க ? எவ்வளவு முக்கியமான விசயத்தைப் பத்திப்பேசிக்கிட்டு இருக்கேன். நீங்கதமாஷ் பண்lங்க இது எவ்வளவு முக்கியமான விசயம்? - - டாக்டர்:- ஆமாமாம்! இது ரொம்ப முக்கியமான விசயம். இதைத் தெரிஞ்சுக்கல்லேன்னா ஜனங்களுக்குத் தலை வெடிக்கப் போயிடும். தெரிஞ்ச ஒடனே பாருங்க வெலைவாசிகள் எல்லாம் எறங்கிப் போயிடும். வேலையில்லாத் திண்டாட்டம் ஒழிஞ்சிடும். எவ்வளவு முக்கியமான பாயிண்டைச் சொல்லிப்புட்டீங்க? அதுக்காக ஓங்களுக்குப் பொன்னாடையே போத்தனும், அதுக்கு நமக்கு வசதி இல்லீங்க. மொதல்ல கையைக் குடுங்க. அரசியல்:- அடப் போங்க நீங்க! நான் சொல்றதுவ இருக்கற உண்மையான் பாயிண்டு என்னன்னு ஒங்களுக்குப் புரியல்லீங்க. நான் எதுக்குச் சொல்லவரேன்னா நேத்திக்குப் புதுசாக் கட்சி ஆரம்பிச்சவுங்களுக்கெல்லாம் பதவி குடுத்து கவுரவம் குடுக்க ஆரம்பிச்சா என்னமாதிரி பழுத்த பழைய அரசியல்வாதி, கட்சித் தொண்டர்களோட மரியாதை இதெல்லாம் என்னங்க ஆகறது? அதுக்குன்னு ஒரு பாரம்பரியம் வேணாம்? டாக்டர்:- இப்பதாங்க நீங்க சொல்றதுல இருக்கற உண்மையான பாயிண்டு புரியுது. அதாவது ஒங்களுக்கெல்லாம் பதவி குடுக்கல்லே! மக்களுக்குச் சேவை செய்ய வாய்ப்புக் குடுக்கல்லேன்னு வெளியில வந்துட்டீங்க. அது தானுங்களே? அரசியல்:- அதெல்லாம் விடுங்க. ஒங்களுக்குப் புரியாது! எனக்கு அடிக்கடி தலை சுத்துதுங்க, ஒருவேளை பி.பி.யா இருக்கு மோன்னு சந்தேகமாயிருக்கு கொஞ்சம் பாக்கறீங்களா? டாக்டர்:- அவசியம் பாத்துடலாம். அவனவன் கட்சி மாறற வேகத்தைப் பாத்தா நியாயமா எங்களுக்குத்தான் தலை சுத்தணும். 56

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுயம்வரம்-மீரா.pdf/57&oldid=463963" இலிருந்து மீள்விக்கப்பட்டது