பக்கம்:சுயம்வரம்-மீரா.pdf/59

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அரசியல்:- என்னங்க செய்யறது? பொது வாழ்வுல இதெல் லாம் சகஜம் எதிர்காலத்துல மது விலக்கு அது இதுன்னு வந்துட்டா எப்பிடியிருக்குமின்னு சொல்ல முடியாது பாருங்க. அதுனால தான். டாக்டர்:- அதுனால என்னங்க? சட்டமெல்லாம் நம்பள என்னங்க பண்ண முடியும்? எதுக்கும் மருந்து சாப்பிடறப்போ அது வேணாங்க! (மெதுவாக) அதனாலதான் இந்த ஆளுக்கு பாக்றதெல் லாம் ரெண்டு ரெண்டாத் தெரியுதோ என்னமோ? நர்ஸ்:- டாக்டர் அந்தப்பதிமூணாம் நம்பர் பேஷண்ட் நெலமை ரொம்ப கிரிட்டிக்கலா இருக்கு.... பல்சே இல்லே! டாக்டர்:- இஸ் இட்?... நான் வரேன்... (அரசியல்வாதி யிடம்) அப்போ நீங்க கிளம்புங்க ஒங்களுக்கு வேலை நிறைய இருக்கும்.... - (போகிறார்கள்) டாக்டர்:- ஒரு நிமிஷம். நீங்க அடிக்கடி ஆஸ்பிடலுக்கு வாங்க அது எங்களுக்கும் நல்லது. ஆனா அடுத்ததடவை வரப்போ இந்த வலதுகை வேணாங்க... அதை வீட்டுலேயே விட்டுட்டு வந்துடுங்க! அரசியல்:- சரிங்க... (போகிறார்கள்) டாக்டர்:- வாங்க சிஸ்டர் போகலாம்... வேறே யாராவது பேஷண்டுங்க இருக்காங்களா? நர்ஸ்:- அந்த வயத்து வலி செட்டியார்தான் இருக்காருஇன்னிக்கி எப்பிடியும் ஒங்களைப் பாத்துட்டுத்தான் போறதுங்கற முடிவோட வந்திருக்காரு! டாக்டர்:- அந்த வயத்து வலி செட்டியாரா?... பிளீஸ் அவரை மட்டும் தயவு பண்ணி உள்ளே விட்டுடாதீங்க எப்பிடியாவது சமாளிங்க இப்ப வந்த கேசுங்களைத்தான் ஒண்னும் பண்ண முடியாது... ஒலக்கை மாதிரி இருக்கான் இவனுக்கெல்லாம் ஒடம்புக்கு என்ன கேடு? பதவியையும், பெயரையும் எந்த அளவுக்கு மிஸ்யூஸ்பண்ண முடியுமின்னு நல்லாக்கத்து வெச்சிருக்கானுங்க! பி.பி.ன்னு சொல்லிக்கறது ஒரு பாஷனாப்போயிடிச்சு அளவுக்கு மீறித் தண்ணியடிச்சுப்புட்டு தலைசுத்துதுன்னு இங்கே வந்து நம்ப கழுத்தை அறுக்கறானுங்க இவனுங்கள நாம கவனிக்கலைன்னா

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுயம்வரம்-மீரா.pdf/59&oldid=463965" இலிருந்து மீள்விக்கப்பட்டது