பக்கம்:சுயம்வரம்-மீரா.pdf/61

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நர்ஸ்:- (வார்டுபாயிடம்) பாத்தியாப்பா? காலங் காத்தால ஒன்னால எனக்குப் பாட்டு இவ்வளவு சீரியஸா இருக்குன்னு மொதல்லயே எனக்குச் சொல்லியிருக்க வேணாம்? வார்டுபாய்:- நல்லாயிருக்குதே கதே! அதுக்கு நான் என்னம்மா பண்ணுவேன்? ஒருத்தனும் கெடைக்கலேன்னா யாருடா இளிச்ச வாயன்னு பாத்துட்டு எங்கிட்டஏம்மா சத்தம் போடறே ஒன் சோலியைப் பாத்துக்கினு போவியா? - நர்ஸ்:- சர்தான் போய்யா இல்லாதபோனா ஒன் லட்சணம் தெரியாதாங்காட்டியும் ஒனக்கு ரெண்டு கையும் பத்தாது, சட்டையிலே இருக்கற பாக்கெட் முச்சூடும் பத்தாது அசந்தா அந்த பொணத்துங்கிட்டக் கூட காசு புடுங்கிடுவே! (திட்டிக்கொண்டே போகிறாள்) கருப்:- ஏம்பா என்ன ஆச்சு? ஏன் எல்லோரும் ஆளுக்கு ஆள் சத்தம் போடlங்க? எம்பேரனுக்கு என்னய்யா ஆச்சு? வார்டுபாய்:- (அலட்சியமாக).... ம்...அவன்போயிச் சேந்துட்டான். சீக்கிரமே ஏன் கொண்டு வரலேன்னு டாக்டர் சத்தம் போடறார். (கருப்பண்ணனும் சின்னானும் இளைஞன்மீது விழுந்து அழுகிறார்கள்) நர்ஸ்:- (ஒரு ரிஜிஸ்டரை எடுத்துக்கொண்டு வந்து வார்டு பாயிடம் கொடுக்கிறாள்.)இந்தாப்பா இந்த ரிஜிஸ்டர்லே அந்த ஆளுங்கிட்டக் கையெழுத்து வாங்கிட்டு வா! வார்டுபாய்:- இந்தாய்யா இதுல ஒரு கையெழுத்துப் போடு!..ம் கையெழுத்துப் போடத் தெரியாதா?... சரி எடதுகைப் பெருவிரலை இப்பிடிக் கொண்டா (பேனாவை எடுத்து மையைத் தடவி முத்திரை வாங்குகிறான்.) ம். ஆனது ஆயிப் போயிடிச்சு! இனிமே என்ன செய்யறது?... ஏம்பா, பாடிய இப்பவே எடுத்துக் கிட்டுப் போறியா இல்லெ நாளைக்கி எடுத்துக்கறியா? எனக்கு டுட்டி முடிஞ்சு போச்சு சீக்கிரம் போகணும். இப்ப இல்லேன்னா கெடங் குக்குல போட்டிடுவோம். அப்பறம் பாடி எப்பக் கெடைக்குமின்னு சொல்ல முடியாது... இங்கே வா! கையில எவ்வளவு பணம் வச்சிருக்கே? எனக்கு நேரம் ஆயிடிச்சி சீக்கிரம் குடு! கருப்:- (ஆவேசத்துடன்) டேய் என்ன பொளைப்புடா பொளைக்கறீங்க? நானும் போனாப்போகுது, போனாபோகுதுன்னு 60

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுயம்வரம்-மீரா.pdf/61&oldid=463967" இலிருந்து மீள்விக்கப்பட்டது