பக்கம்:சுயம்வரம்-மீரா.pdf/81

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராமுத்தாயிக்கு எப்பொழுதும் அக்காளைப் பற்றிய நினைவுகளே வந்து கொண்டிருந்தது. ரெண்டு மூணு வருஷமாக மழையில்லை, கிணற்றில் வேறு சரியாகத் தண்ணீர் இல்லை. வெள்ளாமை விளைச்சலும் சரியில்லை. ஒரு தடவை காலேஜ்ஜிலே படிக்கற அண்ணனுக்கு பீஸ் கட்டறதுக்கு கஷ்டமாக இருந்தப்போ காளைமாடுகள் ரெண்டிலே ஒன்றை ஐயா விற்றுவிட்டார். ஒரு மாடே போதும்னு அந்த மாமா துரைப்பாண்டியனோடு கூட்டுமாடு சேர்த்து வேலை செய்ய ஆரம்பித்தார். வீட்டுக் கஷ்டத்தினாலே ஐயா அக்காள் படிப்பை நிறுத்தி தீப்பெட்டி ஆபீஸ் வேலைக்கு அனுப்பி விட்டார். சீதைக்கு படிப்பை நிறுத்தரதிலே கொஞ்சங் கூட சம்மதம் இல்லை. ஆனால் வேறு வழயில்லைங்கறதையும் தெரிஞ்சுக் கிட்டாள். w வேலைக்குச் சேர்ந்து நாலு மாதத்தில் மூணு ஆபீஸ்-க்கு மாறினாள். நாலாவது ஆபீஸிலேதான் கடைசி வரை நிலைத்து வேலை செய்தாள். அதற்குக் காரணம் கோபால்தான். தீப்பெட்டி ஆபீஸுக்கு வேலைக்கு வர்ற பெண்கள்ளாம் பெரிய முதலாளி, சின்ன முதலாளி, கணக்குப் பிள்ளைகள்.... எல்லாப் பயல்களுக்கும் எல்லாத்துக்கும் உடன் படனும்னு அலைறாங்க... கோபால் ரொம்ப நல்லவன். அசிங்கமே இல்லாத ஆம்பளை, எல்லார் கிட்டையும் சிரிச்ச மொகத்தோட பேசுவான். எல்லாப் பெண்களும் அவனை 'அண்ணாச்சின்னு தான் கூப்பிடுவாங்க... கூப்பிடுவாங்கன்னா அப்படித்தான் அவனும் கூடப்பிறந்த அண்ணனாகத்தான் எல்லாப் பிள்ளைகளுக்கும் இருப்பான். அவன் கூட வேலை செய்யறது எல்லாப் பிள்ளைகளுக்கும் பிடிக்கும். சிரிக்கும்படியாத்தான் பேசுவான். ஆனால் மற்றவங்களை மாதிரி பேச்சிலே அசிங்கமே இருக்காது. வீட்டில் கஷ்டம் அதிகமாகி விட்டதால் ராமுத்தாயும் சீதையோடு தீப்பெட்டி ஆபீஸுக்குப் போனாள். கோபால் ராமுத்தாயைப் பார்க்கறதே ரொம்பப் பிரியமாக இருக்கும். வாப்பா போப்பான்னுதான் பேசுவான். - அப்புறம் சீதை, கோபால் பற்றிக் கதை சொல்றதே இல்லை. &O

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுயம்வரம்-மீரா.pdf/81&oldid=463987" இலிருந்து மீள்விக்கப்பட்டது