பக்கம்:சுயம்வரம்-மீரா.pdf/90

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இமைகளுக்கு நடுவே முள் TITLD "இந்தாங்க, நீங்க இதுவரை எனக்கு எழுதின லெட்டர்ஸ், இதோ நீங்க தந்த பிறந்தநாள் ப்ரெசென்ட்டேசன். நீங்க தந்த புக்ஸ், சாவிக் கொத்து...' 'இன்னைக்கோட என்னை மறந்துடுங்க. இனிமே நீங்க யாரோ, நான் யாரோ. திரும்ப என்னைப் பார்க்கவோ, பேசவோ வேண்டாம். குட்பை' கடிதங்கள், புத்தகங்கள் எல்லாவற்றையும் அவன் எதிரே போட் டாள். அவனுக்கு இடம் தராமல் பேசினாள். விருட்டென்று எழுந்து போய் விட்டாள். அவன், அவள் போவதையே பார்த்துக் கொண்டிருந்தான். கடிதமொன்று காற்றில் படபடத்து நகர, சட்டென அதைப் பிடித்துக் கொண்டான். ஒவ்வொரு கடிதமாய் எடுத்து அடுக்கினான். புத்தகங்களை ஒழுங்காய்த் தோள் பையில் வைத்தான். மண்ணில் சிதறிக் கிடந்த எல்லாவற்றையும் பையில் எடுத்துப் போட்டுக் கொண்டான். பையைத் தலைக்கு வைத்து, இரு கைகளையும் கட்டி, நெற்றியில் வைத்தபடி அப்படியே மணலில் கண்மூடிக் கிடந்தான். அலையோசை கேட்டுக் கொண்டிருந்தது. மனதுள் அதுவரையும் கருப்பு, வெள்ளை ஓவியம் தெரிந்தது. நிலவொளி முகத்தில் பட்டபோது எழுந்து வீட்டுக்கு நடந்தான். அன்றிலிருந்து இப்போதெல்லாம் அவன் இரவில் கிட்டத்தட்ட தூங்குவதேயில்லை. மொட்டைமாடியும் இரவும்தான் காதலி, சிநேகிதம், எல்லாம். வானத்தை அவன் பூரணமாய் நேசித்தான் மொட்டை மாடியில் சுவரையொட்டிப் படுக்கை விரித்து வானத்தையே இரவு முழுவதும் பார்த்துக் கொண்டிருப்பான். ஒவ்வொரு நட்சத்திரமாய் கோர்த்து அவள் பெயரை எழுத்துக் கூட்டிப் படிப்பான். மேகங்களெல்லாம் பூச்செண்டு, அவள் கழற்றி எறியும் ஆடை, கூந்தல் வழியும் அவள் முகம். அவள், அவளன்றி 89

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுயம்வரம்-மீரா.pdf/90&oldid=463996" இலிருந்து மீள்விக்கப்பட்டது