பக்கம்:சுயம்வரம்.pdf/10

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

7

வில்லை. வந்தாலும் அவை புத்தக உலகில் நீடித்து நிற்க அந்தப் புண்ணியவான்கள் விடவில்லை.

இந்தக் ‘கசப்பான அனுபவங்க’ளுக்குப் பிறகு, நான் இப்போது மீண்டும் நண்பர் ராமநாதன் அவர்களுடனும், ஸ்டார் பிரசுரத்துடனும் தொடர்பு கொண்டுள்ளேன். அந்தத் தொடர்பின் முதல் நூலாக இந்த ‘சுயம்வரம்’ என்ற நாவல் வெளியாகியிருக்கிறது. இது ‘டீன் ஏஜர்’ஸுக்காக எழுதப்பட்ட நாவல்தான் என்றாலும், இதில் வரும் ‘ஆனந்த’னைப் போலவோ, ‘அருணா’வைப் போலவோ வேறு யாரும் ஆகிவிடக் கூடாது என்பதே என் விருப்பம். உங்கள் விருப்பமும் அதுவாகத்தான் இப்போதும் இருக்கும் என்பது என் நம்பிக்கை.

பெண்களைப் பல வகைகளிலும் ‘தெய்வ’மாகப் போற்றி வந்தது இந்த நாடு; ‘மாதர் தம்மை இழிவு படுத்தும் மடமையைக் கொளுத்துவோம்’ என்று பாரதியைப் பொங்கியெழுந்து பாடச் செய்தது இந்த நாடு. அப்படிப்பட்ட நாட்டில் பெண்களை வெறும் ‘போகப் பொருள்’களாகக் கருதி, அவர்களுடைய பெயர்களுக்குப் பின்னால் ஒளிந்துகொண்டும், ஒளிந்து கொள்ளாமலும் சில ஆண்கள் கவர்ச்சிக்காக, வயிற்றுப் பிழைப்புக்காக எழுதும் கதைகள். அவற்றை கூசாமல் வெளியிடும் ஏடுகள்...

கண்ணராவி, கண்ணராவி!

அதைவிடக் கொடுமை அம்மாதிரி கதைகளைத்தான் நீங்கள் விரும்பிப் படிக்கிறீர்கள் என்று அவர்கள் சொல்வது!

அந்த ரகத்தில் சேராத இந்த நாவலை அவர்கள் சொல்லும் ‘டீன் ஏஜர்’ஸாரும் படிக்கலாம், ‘டீன் ஏஜர்ஸ்’

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுயம்வரம்.pdf/10&oldid=1384568" இலிருந்து மீள்விக்கப்பட்டது