பக்கம்:சுயம்வரம்.pdf/104

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

விந்தன்

101



'“அதுதானே காதலுக்கு முதல் படி?”

'“அது காதலுக்கு முதல் படியோ, கடைசிப் படியோ, இப்போது நீ அங்கே வந்து அந்தக் குட்டை உடைக்க வேண்டாம்; அதை உடைப்பவர்கள் உடைத்துவிடுவார்கள் ” “யார் அவர்கள்?”

'“வேறு யார்? என்னைப் பெற்று வளர்த்த பாவத்தை ஏற்கெனவே செய்திருக்கும் என் பெற்றோர்தான் அந்தப் பாவத்தையும் செய்வார்கள்”!

'“அவர்களை மட்டும் அந்தப் பாவத்தைச் செய்ய விடலாமா நீங்கள்”?"

“இதற்கெல்லாம் உனக்குப் புரியும்படியாகப் பதில் சொல்வது மிகவும் கடினம், மதன் இயற்கையிலேயே மனிதனுக்கு எத்தனையோ பலவீனங்கள் உண்டு; அவற்றில் அதுவும் ஒன்று என்று வைத்துக்கொள்ளேன்!'”

'“அந்த மாதிரி பலவீனத்தால்தான் என்னை நீங்கள் கலியாணம் செய்துகொண்டீர்களா?”

'“இருக்கலாம்; உன்னைக் கலியாணம் செய்து கொண்டதும் என்னுடைய பலவீனமாயிருக்கலாம்; நீலாவிடம் நான் அனுதாபம் காட்டுவதும் என்னுடைய பலவீனமாயிருக்கலாம். இதையெல்லாம் அன்பு, கின்பு என்று சொல்லிக் கொண்டு, ஆத்மாவைக் கொன்று வாழ முடியாத ஜீவன்கள் சில இன்னும் இந்த உலகத்தில் இருந்து கொண்டிருக்கின்றனவே, அவற்றினிடம் சகஜம் மதன், சகஜம்!”

'“அப்படியானால் இன்னும் உங்களை நான் நம்பத்தான் வேண்டும் என்கிறீர்களா, நீங்கள்?”"

“'ஏன், 'நம்ப வேண்டாம் என்று அந்த ஆனந்தன் சொன்னானா?”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுயம்வரம்.pdf/104&oldid=1384741" இலிருந்து மீள்விக்கப்பட்டது