பக்கம்:சுயம்வரம்.pdf/121

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

118

சுயம்வரம்

 “சொல்லட்டுமே கண்ட இடத்தில், கண்ட நேரத்தில், கண்டதை வாங்கிச் சாப்பிடும் பட்டணமாயிருப்பதைவிட நான் பட்டிக்காடாகவே இருந்துவிட்டுப் போகிறேன்! ” '“சரி, இரு என்னைத் தெரிந்தவர்கள் யாராவது இங்கே வந்து, உன்னை யார் என்று கேட்டால் அவர்களுக்கு நான் என்ன சொல்லட்டும்?'” என்று ஒரு சிக்கலான கேள்வியை அவளிடம் போட்டுவிட்டு, அவள் முகத்தை ஊடுருவிப் பார்த்தான் அவன்.

“'உங்களுக்கு எது இஷ்டமோ அதைச் சொல்லுங்கள்'” என்றாள் அவள்.

'“அதில்தானே கஷ்டமெல்லாம் இருக்கிறது! ” '“என்னால் உங்களுக்கு எந்தக் கஷ்டம் வருவதாயிருந்தாலும் அதை நான் விரும்பமாட்டேன்”'

“அவள் இப்படிச் சொன்னாளோ இல்லையோ, 'அதற்காக என்னை மறந்து வேறொருவனைக் கலியாணம் செய்து கொள்ளக்கூட நீ தயாராயிருப்பாயல்லவா?”" என்றான் மாதவன் சட்டென்று பேச்சை மாற்றி.

'“நீங்கள் என்னை மறந்து மதனாவைக் கலியாணம் செய்துகொண்டது போலவா?” என்றாள் நீலா.

அதற்குள் கணகணவென்று மணி ஒலிக்க, அவர்களுக்கு எதிர்த்தாற்போலிருந்த திரை விலகிற்று.

ஆனால் அவன் எதிர்பார்த்த அவள் மனத் திரை?...

“அது விலகவில்லை”!

ஒரே ஆடலும் பாடலுமாயிருந்த அந்த ஆங்கிலப் படம் மற்றவர்களைக் கவர்ந்த அளவுக்கு நீலாவைக் கவரவில்லை. அடிக்கடி குடிப்பதும் ஆடுவதுமாயிருந்த அந்தப் படத்தின் கதாபாத்திரங்கள் ஏதோ வெறி பிடித்து ஆடுவதாகவே'

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுயம்வரம்.pdf/121&oldid=1385037" இலிருந்து மீள்விக்கப்பட்டது