பக்கம்:சுயம்வரம்.pdf/128

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

விந்தன்

125

'அவர் என்னை நினைக்காதபோது நான் மட்டும் அவரை ஏன் நினைத்துக்கொண்டிருந்தேன்?'

'அவர் என்னை நினைக்காதபோது நான் மட்டும் அவரை ஏன் நினைத்துக்கொண்டிருந்தேன்?'...

தன் உள்ளத்தில் அடுத்தடுத்து எழுந்த இந்தக் கேள்விக்கு அவள் கண்ட விடை இது:

'அவர் என்னை நினைக்காத போது நான் மட்டும் அவரை நினைத்துக்கொண்டிருந்தது என் தவறுதான்!'

இதையும் அவள் தனக்குள்ளேயே வைத்துக் கொள்ளாமல் அவனிடம் தெரிவித்தபோது, அவன் சொன்னான்:

"நீ என்னை நினைத்தது உன் தவறு என்றால், உன்னை நான் நினைக்காமல் இருந்தது என் தவறாக அல்லவா ஆகி விடும்?"

அவள் சிரித்தாள்; சிரித்துவிட்டுக் கேட்டாள்:

"ஆமாம், நீங்கள் ஏன் என்னை நினைக்கவில்லை?"

"உன்னுடைய அசட்டுத்தனம்தான் அதற்குப் பெரும்பாலும் காரணமாயிருந்திருக்க வேண்டும்!"

"அடக்கத்துக்குப் பெயர் அசட்டுத்தனமா?"

இப்போது அவன் சிரித்தான்; சிரித்துவிட்டுச் சொன்னான்:

"இவ்வளவு தூரம் நீ பேசுவாய் என்று நான் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை!"

"அது உங்கள் குற்றமல்ல; இதுவரை நான் உங்களுடன் இவ்வளவு தூரம் பேசாமல் இருந்தது என் குற்றம்!"

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுயம்வரம்.pdf/128&oldid=1384833" இலிருந்து மீள்விக்கப்பட்டது