பக்கம்:சுயம்வரம்.pdf/130

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

விந்தன்

127

"அவசரப்பட்டு விட்டீர்களே!"

"அது இப்போதுதானே தெரிகிறது எனக்கு!"

"ஆமாம், நீங்கள் மதனாவைக் கலியாணம் செய்து கொண்ட விஷயம் உங்கள் பெற்றோருக்குத் தெரியுமா?"

"தெரியும்."

"அப்படியானால் அவர்களுடைய சம்மதத்துடன்தான் நீங்கள் மதனாவைக் கலியாணம் செய்து கொண்டீர்களா?"

"இல்லை; அப்படி நடந்திருந்தால் அவர்கள் ஏன் என்னைத் தனியாக விட்டுவிட்டு ஊருக்குப் போயிருக்கப் போகிறார்கள்?"

"அட, கடவுளே! அது தெரியாத என் பெற்றோர், இப்போது அவர்கள் இருக்கும் ஊருக்கல்லவா போகப் போவதாகச் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்!"

"போகட்டும்; அங்கே போய் அவர்களாக விஷயத்தைத் தெரிந்துகொள்ளும் வரையிலாவது நீ என்னைக் கொஞ்சம் இங்கே நிம்மதியாக இருக்கவிடேன்!"

"கவலைப்படாதீர்கள்; அந்த நிம்மதி என்னால் இன்று மட்டுமல்ல; என்றும் கெடாது."

"இப்போதைக்கு அது போதும். வா, போவோம்."

"எங்கே?"

"இதோ, நாம் போகவேண்டிய பஸ் வந்துவிட்டது!"

"சரி, வாருங்கள்."

இருவரும் மற்றவர்களைப் போலவே தாங்களும் முண்டியடித்துக்கொண்டு பஸ்ஸில் ஏறினார்கள்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுயம்வரம்.pdf/130&oldid=1384842" இலிருந்து மீள்விக்கப்பட்டது