பக்கம்:சுயம்வரம்.pdf/137

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

134

சுயம்வரம்

"ஏன், அவளுக்குத்தான் தெரியுமா அது?" என்றான் மாதவன், சற்றே நகைத்து.

அதற்குமேல் அவனைச் சமாளிக்க முடியவில்லை ஆனந்தனால்; "இல்லை, அந்தத் தந்தியை அவள் சொல்லித் தான்டா நான் அடித்தேன்!" என்று உளறிக் கொட்டினான்.

"இல்லாவிட்டால் அடித்திருக்க மாட்டாய்; அப்படித் தானே? எட்டிப்போடா, நாயே!" என்று அவனை ஒரு தள்ளுத் தள்ளி விட்டுவிட்டு, "போயும் போயும் உன்னைத் திருத்த முடியும் என்று நான் இத்தனை நாளாய் நம்பி யிருந்தேனே, அதைச் சொல்" என்று தன் வழியே நடந்தான் மாதவன்.

அப்படி நடந்தபோது, 'அந்த நாளிலிருந்து இந்த நாள் வரை சட்டங்களாலும் சாஸ்திரங்களாலும்கூடத் திருத்த முடியாத இவனைப் போன்றவர்களை இதற்கு மேல் என்ன செய்ய முடியும்?' என்ற ஒரு கேள்வி அவன் உள்ளத்தில் எழுந்தது.

'ஒன்றும் செய்ய முடியாது; வேண்டுமானால் இன்னும் சில சட்டங்களையும் சாஸ்திரங்களையும் உருவாக்கலாம்; அவ்வளவோ!'

அந்தக் கேள்வியைத் தொடர்ந்து இப்படி ஒரு பதிலும் அவன் உள்ளத்திலிருந்தே அவனுக்குக் கிடைத்தது; சிரித்துக் கொண்டான்.

அவன் தலை மறைந்ததும் தன்னைச் சுற்றிலும் ஒருமுறை பார்த்தான் ஆனந்தன்; 'நல்ல வேளை, இங்கே தனக்குத் தெரிந்தவர்கள் யாரும் 'இல்லை!' என்று தன்னைத் தானே சமாதானம் செய்து கொண்டான். அவன் கைகள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுயம்வரம்.pdf/137&oldid=1384859" இலிருந்து மீள்விக்கப்பட்டது