பக்கம்:சுயம்வரம்.pdf/150

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 வாழ்க்கையை ஒட்டி சினிமா இருக்க வேண்டுமாம்,
சினிமா! ஏன், சினிமாவை ஒட்டி வாழ்க்கை இருந்தால்
என்னவாம்?...

20


சிறிது நேரம் சினிமாவில் ‘கார் சேஸிங்’ நடப்பது போல ‘டாக்சி சேஸிங்’ நடந்த பிறகு, புற நகர்ப் பகுதி ஒன்றில் இருந்த ஒரு பெரிய பங்களாவுக்குள்ளே அருணாவும் மதனாவும் சென்ற டாக்சி நுழைந்தது; அதைத் தொடர்ந்து மாதவனும் செல்வதற்குள் அந்த டாக்சியும் அதில் ஏறி வந்தவர்களும் மாயமாய் மறைந்தார்கள்!

சாலைக்கும் வாசம் செய்யும் இடத்துக்கும் நடுவே நீண்ட இடைவெளி விட்டுக் கட்டப்பட்டுள்ள எத்தனையோ வீடுகளை மாதவன் அதற்கு முன்னால் பார்த்திருக்கிறான்; அவை அமைதியின் இருப்பிடங்களாக இருக்கும் என்றும் அவன் நினைத்திருக்கிறான். ஆனால் அதே முறையில் கட்டப்பட்டு, அவன் கண்டெடுத்த ‘விசிட்டிங் கார்’டால் அவனை அழைக்காமல் அழைத்திருந்த அந்த வீடு...

அமைதியின் இருப்பிடமாக இல்லை; ஆசாபாசத்தின் இருப்பிடமாக, ஆபாசத்தின் இருப்பிடமாக இருந்தது!

பல நாட்டு வாத்தியங்களின் வெறியூட்டும் இசை நயத்தோடு சில அறைகளில் குடி; சில அறைகளில் சீட்டாட்டம்; இன்னும் சில அறைகளில் பிறந்த மேனியாக ஒருத்தி நின்று ஆடிக்கொண்டிருக்க, அவள் அழகையும் ஆட்டத்தையும் பார்த்து ஆரவாரத்துடன் ரசித்துக் கொண்டிருந்தார்கள் அறுபது வயதை எட்டிப் பிடித்துக் கொண்டிருந்த ஆடம்பரதாரிகள் சிலர்!

அவர்கள் இந்த நாட்டின் சராசரி மனிதர்களாகவும் இருக்கவில்லை; சமூகத்திலேயே அந்தஸ்து மிக்க

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுயம்வரம்.pdf/150&oldid=1385197" இலிருந்து மீள்விக்கப்பட்டது