பக்கம்:சுயம்வரம்.pdf/53

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

50

சுயம்வரம்


"எல்லாவற்றுக்கும் ஏதாவது ஒரு சமாதானம் உண்டு, இந்தப் பாழாய்ப்போன உலகத்தில்!" என்றான் அவன் வெறுப்புடன்.

"இல்லாவிட்டால் மனிதன் ஒரு நாளாவது இந்த உலகத்தில் வாழ முடியுமா, என்ன?" என்றாள் மதனா, எங்கேயோ வெறித்துப் பார்த்துக்கொண்டே..

அவளைப் பார்த்துப் பல்லை 'நறநற'வென்று கடித்துக் கொண்டே, "ஆமாம், நீ சினிமாவுக்குப் போகவில்லையா?" என்றான் ஆனந்தன், அருணாவை மெல்லச் சீண்டி.

அவள் முகத்தைச் சுளித்தவண்ணம் அவன் சீண்டிய இடத்தைத் தன் கையால் தட்டித் துடைத்துவிட்டு, "போனேன், அவர்தான் என்னைத் திருப்பி அனுப்பிவிட்டார்!" என்றாள், ஏமாற்றத்துக்குள்ளான குழந்தை விம்முவது போல் ஒரு விம்மல் விம்மி.

"ஏன்?"

"மதனாவுக்கு நான் இங்கே துணையாக இருக்க வேண்டுமாம்; நீலாவுக்கு அவர் அங்கே துணையாக இருக்கப் போகிறாராம்!" என்றாள் அவள்.

இதைக் கேட்டதும், "அவரா சொன்னார் அப்படி?" என்று வியப்புடன் குறுக்கிட்டுக் கேட்டாள் மதனா.

"எல்லாம் அவர்ர்ர்தான் சொன்னார்ர்ர்" என்றாள் அருணா, முதல் நாள் இரவு 'அவர்' என்பதற்கு மதனா கொடுத்த அழுத்தத்தைத் தானும் கொடுத்து.

"அப்படியானால் அவர் இன்னும் என்னை அடியோடு கைவிட்டு விடவில்லைபோல் இருக்கிறதே" என்றாள் மதனா, இழந்த நம்பிக்கையை மீண்டும் பெற்று.

"போடி, பைத்தியமே! அவன் உன்னை அடியோடு கொல்லவா நினைக்கிறான், அணுவணுவாக அல்லவா

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுயம்வரம்.pdf/53&oldid=1384664" இலிருந்து மீள்விக்கப்பட்டது