பக்கம்:சுயம்வரம்.pdf/75

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

72

சுயம்வரம்


துணிந்தீர்களோ, அப்போதே நீங்கள் அவளுக்கென்று ஒரு வீட்டைப் பார்த்திருக்க வேண்டும்..."

"அது என் தவறுதான்."

"தவறு எப்போதும் தனியாக நிற்பதில்லை; அது தன்னுடன் ஒன்றன்பின் ஒன்றாகப் பல தவறுகளைச் சேர்த்துக் கொண்டே போகும்..."

"அப்படியானால் நான் தொடர்ந்து தவறு செய்து கொண்டே இருக்கிறேனா?"

"சந்தேகமில்லாமல் 'நீயே உறவு' என்று அவளைக் கைப்பிடித்த பிறகு, உங்களுக்கு மாமா உறவு எதற்கு? மாமி உறவு எதற்கு? நீலா உறவுதான் எதற்கு?"

அவள் இப்படிச் சொன்னதும் அவனுக்கு என்ன தோன்றிற்றோ என்னவோ, "பாவம் நீலா, அவளும் என்னைக் காதலிக்கிறாள்!" என்றான் பெருமூச்சுடன்.

அருணா மறுபடியும் சிரித்தாள்; "ஏன் சிரிக்கிறாய்?" என்று மாதவன் கேட்டான்.

"ஒன்றுமில்லை."

"என்ன, ஒன்றுமில்லை?"

"உங்களை யாராலும் காதலிக்காமல் இருக்க முடியாது என்று நினைத்தேன்; சிரிப்பு வந்துவிட்டது!"

"அப்படி என்ன இருக்கிறது, என்னிடம்?"

"மதனாவைக் கேட்டுப் பார்த்தீர்களா?"

"இல்லை."

"நீலாவைக் கேட்டுப் பார்த்தீர்களா?"

"இல்லை."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுயம்வரம்.pdf/75&oldid=1384729" இலிருந்து மீள்விக்கப்பட்டது