பக்கம்:சுயம்வரம்.pdf/77

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

74

சுயம்வரம்

இந்தச் சமயத்தில் ஆனந்தன் அவர்களை நோக்கி வர, “அதோ, ஆனந்தன் வருகிறானே, அவனைக் கேட்டால் தெரியுமா?” என்றான் மாதவன்.

சட்டென்று அவன் வாயைத் தன் கையால் பொத்தி, “ஸ், நேற்று வரைதான் அவள் உங்கள் காதலி; இன்று சாட்சாத் மனைவி. அவள் காணாமற்போன விஷயம் உங்களுக்குள்ளேயே இருக்கட்டும்; வெளியே தெரிய வேண்டாம்!” என்றாள் அருணா.


உல்லாச உலகம், உனக்கே சொந்தம்;
அனுபவி ராஜா அனுபவி!...


1


ன்ன, மிஸ்டர் மாதவன்! என்ன சொல்லிவிட்டுப் போகிறாள், அந்த அருணா?” என்று கேட்டுக்கொண்டே வந்தான் ஆனந்தன்.

“ஒன்றுமில்லை; மிஸ்டர் ஆனந்தன் என்னைக் காதலிக்கிறார்; அவரை நான் கலியாணம் செய்து கொள்ளட்டுமா, வேண்டாமா?” என்று கேட்டாள். ‘பேஷாய்ச் செய்து கொள்ளலாம்’ என்றேன்; போய்விட்டாள்” என்றான் மாதவன், தன்னுடைய கவலை அவனுக்குத் தெரியாமல் இருப்பதற்காக அவன் தோளில் செயற்கைச் சிரிப்புடன் ஒரு தட்டுத் தட்டி.

“உன்னைப்போல் என்னையும் மடையன் என்று நினைத்துக் கொண்டாயா, என்ன?” என்றான் ஆனந்தன், ஒரு தட்டுக்கு இரண்டு தட்டுக்களாக அவன் தோள்களில் தட்டி.

“எனக்குத் தெரியாதே, பிரதர்! எப்பொழுதிலிருந்து நீ இப்படிப் புத்திசாலியானாய்? ”

“போடா, மக்கு! பிறந்ததிலிருந்தே நான் புத்திசாலியாகத்தான் இருக்கிறேனாம். ஒரு உதாரணம் வேண்டுமானால் சொல்லட்டுமா?”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுயம்வரம்.pdf/77&oldid=1385140" இலிருந்து மீள்விக்கப்பட்டது