பக்கம்:சுரதா ஓர் ஒப்பாய்வு.pdf/100

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96 கவிஞர் முருகு சுந்தரம் شه தோல்சீவிய கரும்புத்துண்டுகளைப் போலவும், இனிக்கும் கனிச்சுளை போலவும், சிறிய சிறிய தொடர்களோடு கூடிய வினை முடிவுகள் படிப்ப வரைப் பரவசப்படுத்தும். அருவியாகவும், தவழும் ஒடையாகவும், மணித்தேராகவும், நாட்டிய நங்கை யாகவும்,துள்ளும் மானாகவும், தென்றலாகவும் இவர் கவிதை விளங்கும். ஆனால் புயலை இவர் பாட்டில் சந்திக்க முடியாது. இருபதாம் நூற்றாண்டில் ஆசிரிய விருத்தம் அதிக விளம்பரம் பெற்றது. எளிமை காரணமாக எல்லாரும் அதையே கையாண்டனர். எண்சீர் ஆசிரிய விருத்தத்தில் எத்தனை விதமான சந்த வேறுபாடுகள் உண்டோஅத்தனை வேறுபாடுகளையும், புதுப் புதுப் பாணிகளையும் பாவேந்தர் படைத்துக் காட்டினார். சுரதா தம் ஆசிரியரைப் பின்பற்றி எண்சீர் விருத்தங்களையே விரும்பி எழுதினார். அரிதாகவே அகவலும், அறுசீர் விருத்தமும் எழுதினார். பாவேந்தர் விருத்தம் ஆண் விருத்தம், சுரதாவின் விருத்தம் பெண் விருத்தம். பொதிகைமலை விட்டெழுந்து சந்த னத்தின் புதுமணத்தில் தோய்ந்து,பூந் தாது வாரி, ததிதழுவி அருவியின்தோள் உந்தித், தெற்கு தன்முத்துக் கடல்அலையின் உச்சி தோறும் சதிராடி, மூங்கிலிலே பண்ன ழம்பித் தாழையெலாம் மடற்கத்தி சுழற்ற வைத்து,