பக்கம்:சுரதா ஓர் ஒப்பாய்வு.pdf/101

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

97 சுரதா ஒர் ஒப்பாய்வு گھg முதிர்தெங்கின் இளம்பாளை முகம்சு வைத்து முத்துதிர்த்துத் தமிழகத்தின் வீதி நோக்கி அந்தியிலே இளமுல்லை சிலிர்க்கச், செந்தெல் அடிதொடரும் மடைப்புனலும் சிலிர்க்க என்றன் சிந்தை அணு ஒவ்வொன் றும்சி லிர்க்கச் செல்வம் ஒன்று வரும்: அதன்பேர் தென்றல்காற்று இவ்விருத்தத்தின் ஒசையை உற்று நோக்குங்கள். தென்றல் நடப்பதைக் கூடப் பாவேந்தர் போர் வீரன் அடியெடுத்து நடப்பதுபோல் எழுதி யிருக்கிறார்; சுரதாவின் விருத்த நடையைப் பாருங்கள்: தலையழகி; தாமரைப்பூ அழகி, தேமாந் தளிரழகி: தத்துதடை யழகி. தங்கச் சிலையழகி; செங்கனிபோல் அழுகி, வண்ணச் சித்திரவி சித்திரவாய் அழகி: காம விலையழகி; வெள்ளிநிலா அழகி; வான வில்லழகி: விண்மின்னல் அழகி, ஆணி மலையழகி; மாதவியோல் அழகி, அந்தி மாலைவெயில் நிறத்தழகி, அந்த அன்னம் மணித்தேரின் குலுங்கலோசையை இப்பாட்டில் கேட்கலாம். பாரதிதாசனைப் பாராட்ட வந்த சுரதா ஓரிடத்தில் அவருடைய விருத்தப்பாவின் வெற்றியையும் கீழ்க்கண்டவாறு பாராட்டுகிறார். 乐一7