பக்கம்:சுரதா ஓர் ஒப்பாய்வு.pdf/104

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

100 கவிஞர் முருகு சுந்தரம் شه இன எதுகை என்றே பெயர். ஆனால் சுரதா எப்பாடு பட்டேனும் அதே எதுகையைத்தான் பயன்படுத்து வாரே தவிர இன எதுகையைப் பயன்படுத்த மாட்டார். அதே எதுகை வரும்படி அவரே புதிதாகச் சொற்களைப் படைத்துவிடுவார்: "பதிபக்திப் பாட்டெழுதல் எளிது; காதற் பாட்டெழுதிக் காட்டுவதே கடினம்’ என்றே அதவத்துர் புதுமதியன் கூற, ஆங்கே அமர்த்திருந்த திருத்தக்கன் அவனை நோக்கி, 'மதிமிக்கோன் சாதிப்பான் எதையும்; அன்னோன் மாற்றாரின் புத்தகத்தாற் பிழைக்க மாட்டான்; எதிர்நிற்பான்; வென்றாரை வெல்வான்’ என்றான். 'எழுதுவிரோ நீர்?"என்றான்:"இயலும் என்றான்." பூவெல்லாம் பொன்னேநின் உடலின்மீது ஆத்திருக்க நியவற்றைப் பார்த்தி ருந்தும் காவெல்லாம் சென்றுசென்று நின்று நின்று கால்நோவப் பூப்பறித்துச் சூடும் பெண்ணே நாவில்நீ நெஞ்சில்நீ அஞ்ச னாட்சி நல்லதமிழ்ப் பாடல்நீ அன்றோ!' என்றான் ஒவம்மாள் ஈன்றமகள் சிரிப்பை ஈன்றாள்; உடம்படுமெய் இலக்கணத்தை இரவில் கண்டார்." தங்காமல் தயங்காமல் வாய்க்கால் வெள்ளம் ததும்பிவழிந் தோடிவரக் கண்ட குப்பன் 'வங்காளக் கடல்நோக்கி ஓடும் நீரே வயலுக்குப் போ வென்று பாயச்ச லானான்.