பக்கம்:சுரதா ஓர் ஒப்பாய்வு.pdf/106

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

102 கவிஞர் முருகு சுந்தரம் شه எனப்புகழும் எழிலுடையாள்; இயற்கை ஈத்த இருகும்ப சம்பத்தும் உடையாள்; வெல்லும் தனித்தமிழை அணைத்தகவைப் பாடல் போன்றாள்; தமிழ்வேந்தன் தேர்போன்றான்; தென்றல் போன்றாள்.' அரும்புகொப் புளித்ததுபோல் சிரிப்பும், தாடே அதிசயித்த பேரழகும் வாய்ந்த பெண்ணை கரும்புகொப் புளித்ததுபோல் கவிகள் தந்த கம்பர் மகன் காதலித்தான்; ஆனால் நல்ல இரும்புகொப் புளித்திட்ட யானை யின்மேல் ஏறுகின்ற குலோத்துங்கன் மறுத்திட் டானாம் நரம்புகொப் புளிக்கின்ற பருவ வேகம் தானறிவேன்; சோழன்தான் அறிந்தானில்லை. " இருபத்து எடுத்தாடும் இடையான்! கூந்தல் இருட்டுடையாள் ஒய்யாரநடையாள் ஒட்டும் பருவத்தான்! பசுதெய்யின் நிறத்தாள்! நான்கு பழம்சுமந்த பனிமுல்லைக் கொடியாள்; கத்தும் கருங்கடல்போல் கண்ணுடையாள் பருவப் பார்வைக் கடல்களுக்கு இட்டஇரு கரைகள் போன்ற புருவத்தான்! பிறைஒத்தாள் சிறிது நேரம் புரட்டியதோர் புதியபுத் தகத்தைப் போன்றாள்!" விதவை வீணை மீனாட்சி தன் காதல் ஆவேசத்தை மிக நுட்பமாக வெளிப்படுத்துகிறாள். அவள் இழுத்த இழுப்பிற்கெல்லாம் சுரதாவின்