பக்கம்:சுரதா ஓர் ஒப்பாய்வு.pdf/124

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

120 கவிஞர் முருகு சுந்தரம் மி ஆங்கிலத்தில் கதைப் பாடல்களை Ballad என்று கூறுவர். மேலை நாடுகளில் அவை இசையரங்கு (ballad concert)களில் பாடப்படும்; இசை நாடகங் (ballad opera)களில் நடிக்கப்படும். அதே போல் நம் நாட்டிலும் கதைப்பாடல்கள் நாட்டுப்புறங்களில் லாவணி,உடுக்கடிப்பாட்டு, வில்லுப்பாட்டு என்னும் பெயரில் பாடப்பட்டு வந்தன. நாம் அவற்றை நாட்டுப் பாடல் (folk songs)என்றும் கூறுவதுண்டு. இவை பெரும்பாலும் எழுத்தில் இல்லாமல் வழிவழியாகவே, வாய் மொழிப் பாடல்களாகவே இருந்தன. அண்ணன்மார் கதை" இதற்குச் சிறந்த எடுத்துக்காட்டு. முப்பது ஆண்டுகளுக்கு முன்பு நாட்டில் நடைபெற்ற முக்கியமான கொலைகளைக்கூட, 'கொலைச் சிந்து என்னும் பெயரில் சந்தைகளிலும், திருவிழாக்களிலும் டேப்' அடித்து உருக்கமாகப் பாடுவதுண்டு. அந்தப் பழக்கமெல்லாம் திரைப்படம் வந்தபிறகு அடியோடு அற்றுப் போய்விட்டன. பதினெட்டு, பத்தொன்பதாம் நூற்றாண்டுச் சிறு பிரபந்தங்களான தூது, உலா, கோவை, மடல், விலாசம் என்பனவும் ஒருவகைக் கதைப் பாடல்களே. அவற்றில் தலைவன்-தலைவி பெயர்கள்தாம் மாறி யிருக்குமே தவிர, கதைப் பொருள்(theme)ஒன்றுதான். ஆனால் இந்த நூற்றாண்டுத்தமிழ்க்கதைக் கவிதைகள் சிறு பிரபந்தங்களிலிருந்து, முற்றும் மாறுபட்டவை.