பக்கம்:சுரதா ஓர் ஒப்பாய்வு.pdf/126

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

; 122 கவிஞர் முருகு சுந்தரம் tاسلام யம்சத்துக்காகவே (Art for art sake)கதைக் கவிதைகள் எழுதினார். கதைக் கவிதை வெற்றி பெற வேண்டும் என்பதற்காகக் கதைச் சிறப்பு மிக்க வரலாற்றுச் செய்திகளைத் தேர்ந்தெடுத்தார். சுரதா எழுதியவற்றுள் அமுதும்தேனும், விதவையும் வேதாந்தியும், முத்தமிட்ட ஞானி, கண்ணிர்க் கதை ஆகியவை மிகச் சிறப்பான கதைக் கவிதைகள். பட்டத்தரசியும், வன்னிய வீரனும்கூடப் பெரிய கதைக்கவிதைகளே. மெய்விளக்கக் கவிஞர்கள் யாரும், காவியங்கள் எழுதும் மரபில்லை. சுரதா கதைக் கவிதைக்காக, மிகச் சிறந்த கதைகளைத் தேடிப்பிடிப்பது வழக்கம். பாரசீகப் பஞ்சகாவியங்களுள் ஒன்றான ஷிரீன் குஸ்ரூ காதலை அழகிய உணர்ச்சிமிக்கதுன்பியல் காதற்கவிதையாகச் சுரதா எழுதியிருக்கிறார். அது, ஷிரீன் என்ற அழகி, ஃபர்ஹாத் என்ற சிற்பி, குஸ்ரூ என்ற மன்னன் ஆகிய மூவரைப் பற்றிய முக்கோணக் காதல் கதை: துன்பியல் முடிவைக் கொண்டது. மற்றொன்று, ஒளரங்கசீப்பின் மகளும் கவிஞருமான ஜைபுன்னிஸ்ஸாவின் காதல் கதை. இதுவும் துன்பியல் முடிவைக் கொண்டது.