பக்கம்:சுரதா ஓர் ஒப்பாய்வு.pdf/128

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

124 கவிஞர் முருகு சுந்தரம் شه 'பத்தரைமாற் றுத்தங்கப் பழமே! நீயோர் பதுமை யென்றான். பேசிடுமோ பதுமை? என்றாள். 'சித்திரம்நீ என்றிட்டான் சிரித்துக் கொண்டே. 'சித்திரத்திற் கழுகுண்டு, சதையே தென்றாள். 'முத்தத்தில் இருக்கின்ற இனிமை, நம்தாய் மொழியிலில்லை; உமர்கையாம் பாட்டில் இல்லை; அத்தாணி மண்டபத்தின் மணியே! என்றான் 'அடக்குங்கள் சத்தத்தை' என்றாள் அன்னம். நிருவாண மலர்மீது நீல வண்டு நிருவாண மாயிருக்க அதனைக் கண்டு 'திரைமறைவே தேவையில்லை போலும் என்றாள். 'தேவையில்லை வண்டுக்கு வெட்கம்' என்றான். இருட்டுக்குள் சென்றார்கள் இரண்டு பேரும்; இடைநடுவில் பேச்சில்லை! வியர்வை யோடு, சிரித்தபடி அவன்வந்தான் வெளியில்! கண்கள் சிவந்தபடி அவள்வந்தாள் இருட்டை விட்டு. 'அருள்வேண்டும் என்றிடுவர், அதுவா வேண்டும்? அறம் வேண்டும், அவ்வறத்தைப் போற்றிக் காக்கப் பொருள்வேண்டும், புகழ்வேண்டும், போகம் வேண்டும்; பொய்யுலகில் பொய்கூடப் பேச வேண்டும். இருள்கூட அன்றாடம் நமக்கு வேண்டும்; இருட்டுக்குள் காதலர்க்கு உடையேன் வேண்டும்? சரசாங்கி' என்றிட்டான்; சிரித்தாள்; இந்தச் சந்திப்பை ஆள்மூலம் அறிந்தான் மன்னன்.