பக்கம்:சுரதா ஓர் ஒப்பாய்வு.pdf/140

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

136 கவிஞர் முருகு சுந்தரம் முதல்மனைவி நீயெனக்கு; தானு னக்கு முதலிரவுக் காதலனாய் வாய்க்க வில்லை புதுமதுவும் நீயன்று; வண்டு கிண்டாப் புதுமலரும் நீயன்று.மாதே உன்றன் சதையிதழ்கள் கண்ணாடிக் கன்னம் ஆசை தருகின்ற மதிவதனம் இவற்றுள் இங்கே எதுபுதிது? நாடோறும் நீயும் நானும் இட்டுவந்த முத்தமன்றோ புதிது பெண்ணே! முன்னழுகும் பின்னழுகும் முகத்தின் வாசல் முத்தழகும் மூக்குமல ரழகும், வெள்ளை அன்னமிடும் நடையழகும் காட்டிக் காட்டி அன்றாடம் கொடியிடையை ஆட்டி ஆட்டிக் கன்னமென்னும் கனிகளிலே கனிவு காட்டிக் கண்களினால் காதலுக்குப் பாதை காட்டிப் பொன்னுருவை தின்னுருவில் காட்டி என்னைப் பூசிக்க வைத்தவளே! இதனைக் கேளாய். இடியரசன் யானென்றே வீரம் பேசி எனையெதிர்த்தான் ஆஸ்திரியன்; பின்னர் அந்த முடியரசன் சத்தித்தான்; ஒருநாள் பேசி முடிவெடுத்தோம், ஒப்பந்தம் செய்து கொண்டோம். மடிமலரே! ஆஸ்திரிய நாட்டு மன்னன் மகளான மேரியைதான் மணந்து கொண்டால் நெடுங்கடலைத் தரையெனவே நினைக்கும் இந்த நெப்போலி யன் திட்டம் புகழை யெட்டும்!