பக்கம்:சுரதா ஓர் ஒப்பாய்வு.pdf/141

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

137 சுரதா ஒர் ஒப்பாய்வு يوليو உருவத்தாற் சிறந்தவளே! என்றன் நெஞ்சில் உலாவிவரும் எண்ணமெனும் பெண்ணே கண்ணே! பருவத்தாற் பழுத்தவள்நீ! ஆனால் அந்தப் பட்டாடைக் கட்டழுகி நெஞ்சில் ஏறும் கருவத்தாற் பழுத்தவளே ஆவாள்; அந்தக் காரிகையை நான்மணக்க மறுத்தே னாயின் இருபத்து நான்காம்தாள் நின்ற சண்டை இனித்தொடரும் என்பதனால் ஏற்றுக் கொண்டேன். இப்படிக்கு நெப்போலியன். வாழைப்பூ வேதாந்தம் பெருங்கீர்த்தி பெற்றஷெல்லி பிறந்த நாட்டில் பிறந்தவரே, லார்டுபெண்டிங் துரையே! நாட்டின் வருங்காலம் அறிந்தவரே, வணக்கம்; சொல்லில் வல்லவரே நல்லவரே வணக்கம்; உள்ளம் திருந்தாத முழுமூடர் இந்த நாட்டில் தீமைபல புரிகின்றார்; எனவே, அன்பே உருவான பெண்டிரெலாம் அடிமை யாகி உறைக்கிணறு செய்கின்றார் கண்ணி ராலே! அல்லிப்பூ முல்லைப்பூ தாம ரைப்பூ அத்தனையும் வானத்தை நோக்கிப் பூக்கும் மெல்லியதல் வாழைமட்டும் தலைகு னிந்து வீதிமண்ணைப் பார்த்தபடி பூக்கும்; நாட்டின்