பக்கம்:சுரதா ஓர் ஒப்பாய்வு.pdf/142

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

138 கவிஞர் முருகு சுந்தரம் நல்லவர்கள் என்கருத்தை ஆத ரிக்க நாலைந்து வைதீக வெறியர் மட்டும் வல்லமையே இல்லாமல் கூவு கின்றார் வாழைப்பூ வேதாந்தம் பேசு கின்றார். கன்யூஷ்யஸ் என்பானோ சீன ஞானி; கற்றறிந்த மாமேதை, உலகம் போற்றும் அன்பாளன்; அவன்தந்தை ஹஅலி யாங்கை. அவனுயரம் பத்தடியாம்; சென்ற திங்கள் முன்கோபத் தோடென்னை வெட்ட வந்த முட்டாளும் அவனுயரம் இருப்பான்; கல்வி முன்னேற்ற மில்லாதார் வைத்தி ருக்கும் மூலதனம் வேறென்ன, கோபம் தானே! குழந்தைகளை ஈன்றிடவோ இந்துப் பெண்கள் குலவிமகிழ்ந் திருப்பதற்கோ பார்சிப் பெண்கள் அழகொடுதம் இல்லத்தை வைத்துக் கொள்வோர் ஆப்கானி தேசத்துப் பெண்கள் என்பர். பழையகதை இவையனைத்தும்; இன்றோ இந்துப் பத்தினிகள் உடன்கட்டை ஏற வேண்டும்! விழியிலொன்று கெட்டுவிடின் முகத்தில் மற்றோர் விழிவாழுக் கூடாதா? கூடா தாமே! கால் கழிந்த கட்டிலெனும் பாடை மீது கதைமுடிந்த சதைப்பிணத்தைப் படுக்க வைத்தே நால்வரதைச் சுடுகாடு சுமந்து செல்லல் நடைமுறைதான்; நாமிதனை அறிவோம்; ஆனால்