பக்கம்:சுரதா ஓர் ஒப்பாய்வு.pdf/151

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுரதா ஒர் ஒப்பாய்வு 147 அப்போது அவள், நெல்லின் முனையளவு தூரம் ஒருகாலைத்துக்கி நிலத்தில் வைத்தாள். அப்போது அவன் ஆசையோ வில்லின் முனையளவு தூரம் விரிந்து சென்றது.' அவளுடைய நீள்விழிகள் நீலவானத்தின் இறக்குமதி. சேல் கெண்டைகள் போட்டுவைத்த சிறுசேமிப்பு. அவள் கூந்தலோ அவசரத்தில் அவிழ்ந்து தொங்கும் இருண்ட மேகம். வெளிச்சத்தைக் கண்டு விலகிச் செல்லாத விநோத இருட்டு.' கடல் இந்த உலகஉருண்டையின் முகத்தில் தோன்றிய முதற்பள்ளத்தில் தவறிவிழுந்துவிழுந்த நாளன்று முதல் இன்றுவரை ஓயாமல் அழுதுகொண்டே இருக்கும் ஓர் ஆதிவாசி. மரியாதைக்குரிய மகரமீன்களும்