பக்கம்:சுரதா ஓர் ஒப்பாய்வு.pdf/156

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

152 கவிஞர் முருகு சுந்தரம் شه தரையில் வீழும் தன்மையைப் போல! வீங்கிய தேங்காய் வீழ்ந்ததால் அந்தப் பெண்ணழகி புதிய புண்ணழகி யாயினள்! வாயிலிருந்தும் மலர்மூக்கி லிருந்தும் வழிந்தது. செந்நீர்; எழுந்தது கண்ணிர்! கண்ணைவிட் டெழுந்த கண்ணிர் ஊர்வலம் கட்டாத் தரையைத் தொட்டு நின்றது தெங்கம் பழுத்தினால் பொன்னியின் அங்கத்தி லோர்தழும் பமைந்து விட்டதே! - செய்தி: தினத்தந்தி 11.5.63. சிலம்புச் செல்வர் இலங்கை செல்கிறார் மேடை மேகம் மீசை ம.பொ.சி. இங்கிலீஷ் ஏப்ரல் இரண்டாம் தேதி இலங்கைக்குப் போய்வரத் திட்டமிட்டிருக்கிறார். சேறாகும் குளத்துச் சிறுமீன் தின்பவர் சேறாகாத தென்கடல் இலங்கையில் பத்துநாள் சுற்றுப் பயணம் செய்தபின், விண்ணைக் கிழிக்கும் விமானத்தில் ஏறிச் சென்னை வந்து சேருவார் விரைவிலே." - சுரதா இதழ், 1.4.69.