பக்கம்:சுரதா ஓர் ஒப்பாய்வு.pdf/157

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ഴ്സ് சுரதா ஒர் ஒப்பாய்வு 153 எதையும் எழுத முடியும் தொடர்பே இல்லாத இரண்டு பொருள்களைத் தொடர்புப் படுத்தி, அதுவும் சிலேடையில் பாட வல்லவன் காளமேகம். எப்படிப் பாடச் சொல்லிக் கேட்டாலும், பாடமுடியும் என்பது பேராற்றல் தானே? சுரதாவுக்கும் அந்த ஆற்றலுண்டு. பரமசிவனுக்கும் பாரதிதாசனுக்கும் என்ன சம்பந்தம்? ஆனால் 'பரமசிவனும் பாரதிதாசனும்' என்னும் தலைப்பில் ஒரு பாடலைக் கைத்தறிக் கண்காட்சி மலரில் எழுதினார் சுரதா. பரமசிவனும் பாரதிதாசனும் அடியலங் காரம், செய்யுள் அணியலங் காரம், பாட்டுப் படையலங் காரம் கண்ட பாரதி தாச னுக்கு நடையலங் கார முண்டு. நாலுபேர் மெச்சத் தக்க உடையலங் கார மெல்லாம் உண்டே அச்சிவனுக் குண்டோ?