பக்கம்:சுரதா ஓர் ஒப்பாய்வு.pdf/162

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

158 கவிஞர் முருகு சுந்தரம் شه "அப்படிப்பட்டவர்களால், மிகவும் உன்னத மானகவிதைகளை எப்படி எழுதமுடிந்தது என்பதைப் பற்றிச் சிந்தித்துக் கடைசியாக ஒரு முடிவுக்கு வந்தேன். 'கவிஞர்கள் சாமியாடி போன்றவர்கள். சாமியாடி எப்படிச் சில நேரங்களில் "அருள்வாக்குச் சொல்லுகின்றானோ, அது போல் இவர்களும் சில நேரங்களில் மிக உயர்ந்த கருத்துகளைத் தம்மையும் மீறி வெளிப்படுத்துகிறார்கள். ' சாக்ரட்டீஸ் மேலே கூறிய கருத்தில் ஒரளவு உண்மையும் இருக்கலாம். சில கவிஞர்களின் நடவடிக்கை இயல்பாக இருப்பதில்லை. பைசா நகரக் காவலர்கள் தனது வேலைக் காரனை அடித்துவிட்டார்கள் என்பதற்காக அந்நகரக் காவல்துறைத் தலைவனைத் தன்னோடு வாட் போருக்கு வரும்படி அறைகூவல் விடுத்தான் கவிஞன் பைரன். "ஏரியல் என்ற தனது படகில் நிர்வாணமாகப் படுத்து வெயில் காய்ந்துகொண்டிருந்த ஷெல்லிக்குத் திடீரென்று கவிதை ஆவேசம் வந்துவிட்டது. அப்படியே எழுந்து கடற்கரையில் நடந்து வந்ததோடு, ஆடவரும், பெண்டிரும் கூடியிருந்த தன்வீட்டு வரவேற்பறையிலும் நுழைந்துவிட்டான்.