பக்கம்:சுரதா ஓர் ஒப்பாய்வு.pdf/164

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

160 கவிஞர் முருகு சுந்தரம் الله சேலத்தில் பெரிய செல்வரும், பேருந்து உரிமை யாளரும், ஆலை அதிபரும், காங்கிரஸ் தலைவரு மான ஒரு பிரமுகரிடம் விளம்பரம் பெறுவதற்காகச் சுரதாவை அழைத்துச் சென்றோம். அவர் அப்போது வெளியில் சென்றிருந்தார். அங்கே அப்போது இரண்டு பெரும்புலவர்கள் அமர்ந்திருந்தனர். இருவரும் பழுத்த ஆத்திகர்கள்; வைராக்கிய வைணவர்கள். கம்பராமாயணத்திலும், காந்தியத்திலும் அளவுகடந்த பற்றும் ஈடுபாடும் கொண்டவர்கள். விவேகானந்தரின் பக்தர்கள். சுரதா விடம் அன்பும் மரியாதையும் கொண்டவர்கள். சுரதாவைக் கண்டவுடன், கவிஞரே வருக!' என்று ஆவலோடு வரவேற்று அன்புடன் அளவளாவினர். சுரதாவின் பேச்சு இலக்கியத்தைக் குடைந்து கொண்டு சென்று இறுதியில் விவேகானந்தரிடம் வந்து நின்றது. பேசிக் கொண்டிருந்த சுரதாதிடீரென்று "நிவேதிதா விவேகானந்தரின் காதலி' என்று ஒரு குண்டைத் தூக்கிப் போட்டார். உடனே அவ்விடத்தில் ஒரு நிசப்தம்! புலவர்களின் முகம் பேயறைந்தாற் போல் ஆயிற்று. சற்றுநேர மெளனத்துக்குப் பின், இக்கருத்தை நீங்கள் ஆதாரத்தோடு நிரூபிக்க முடியுமா?’ என்று கேட்டார் ஒரு புலவர். மிகவும் புண்பட்ட உணர் வோடு அக் கேள்வி அவர் உள்ளத்திலிருந்து புறப்