பக்கம்:சுரதா ஓர் ஒப்பாய்வு.pdf/167

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

163 சுரதா ஓர் ஒப்பாய்வு الجو எம்.ஜி. இராமச்சந்திரன் திரைப்பட உலகில் புகழேணியின் உச்சியில் இருந்த நேரம். அவருடைய சொந்தப் படமான நாடோடி மன்னன் தமிழ் நாடெங்கும் பெருத்த வசூலுடன் ஒடிக் கொண் டிருந்தது. அப்படத்தில் பாடல் எழுத சுரதாவுக்கும் வாய்ப்புக் கொடுத்திருந்தார். 'வருக வருக வேந்தே" என்று தொடங்கும் பாடல் அது. அப்படத்தைத் தொடர்ந்து அடுத்து வெளிவர விருந்த தமது படங்களிலும் எம்.ஜி.ஆர். சுரதாவுக்கு வாய்ப்புக் கொடுத்திருந்தார். 'தமிழ் சினிமா என்ற பத்திரிகையை நடத்தி வந்த கரீம் என்பவர், நடிக நடிகையர்களைப் பற்றிக் கேவலமாக எழுதியிருந்தார் என்பதைக் காரணமாக வைத்து அவரைக் கண்டனம் செய்ய, சென்னை விஜயா தோட்டத்தில் எம்.ஜி.ஆரால் ஒரு கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. திரையுலகப் பிரமுகர் களும் பிரபல எழுத்தாளர்களும் அக் கூட்டத்துக்கு அழைக்கப்பட்டிருந்தனர். சுரதாவும் அழைக்கப் பட்டிருந்தார். ஆனால் எம்.ஜி.ஆர். அக் கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை. அக் கூட்டத்தில் தமிழ் சினிமா இதழையும் அதன் ஆசிரியரையும் கண்டித்துப் பலர் பேசினர். எல்லாரும் எம்.ஜி.ஆரைப் பாராட்டிப் பேசத் தவறவில்லை. கூட்டத்திற்கு வந்திருந்த எழுத்தாளர் சாண்டில்யன், 'எம்.ஜி.ஆர். வரலாற்றுப் படக் கதாநாயகனாக நடிப்பதற்கென்றே பிறப்பெடுத்தவர்;