பக்கம்:சுரதா ஓர் ஒப்பாய்வு.pdf/175

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுரதா ஒர் ஒப்பாய்வு 171 அவரைப்பற்றி அவர் பாரதி இறந்த ஆண்டிலே பிறந்ததான் பாரதிதாசனின் பாடலைப் பயின்றதால் ஒருவா றென்னை உயர்த்திக் கொண்டேன். செய்யுள் இலக்கணம் தெரிந்து கொண்டபின் தடுமாற்றம் இல்லாத் தகுதிபெற லானேன். தகுதி இருப்பின் தனித்தி யங்கலாம். அத்தகுதி என்னிடம் அதிக மிருப்பதால் தமிழ்க்கவிதை உலகில் தனித்தியங்கு கின்றேன். பெரும்பாலும் கவிஞர்கள் பிறரைப்பின் பற்றி எழுதும் வழக்கம் இங்குண்டே அந்த நிழல்வழி வாசலை விட்டு நீங்கி எழுதும் கவிஞன்நான். இவரையோ அவரையோ பின்பற்றி எழுதப் பிரியப் படாதவன். கணக்கைப் போன்றதே கவிதை என்பதால், கவிதை புனைந்திடக் கற்பனை வேண்டும் என்னும் கருத்தைதான் ஏற்பதே இல்லை!