பக்கம்:சுரதா ஓர் ஒப்பாய்வு.pdf/176

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

172 கவிஞர் முருகு சுந்தரம் புகழ்வெறி எனக்குப் புள்ளி யளவும் இல்லை! சராசரிப் பொறாமையும் இல்லை! மடையனாய் இருப்பதில் உள்ள மகிழ்ச்சி அறிஞனாய் இருப்பதில் இல்லை; ஆதலால் முட்டாளாய் இருக்கவே முயன்று வருகிறேன். நானொரு கவிஞன்! அதைவிட நானொரு நல்லவன் இந்த நாட்டிலே " என் முதல் சந்திப்பு முப்பத்தைந் தாண்டுகட்கு முன்னர் யான் பாவேந்தர், புதுவைப் பாரதி தாசனை நேரில் சென்று சந்திக்க நினைத்தேன். பயணச் செலவுக்குப் பணமில்லை ஆதலால், நண்பர்கள் பலரை நாடினேன். ஒருசிலர் கையையும், ஒருசிலர் பொய்யையும் விரித்தனர். புறப்பட்டுப் புதுவைக்குப் போக வேண்டுமே! என்செய்வ தென்றுதான் எண்ணிக்கொண்டிருக்கையில், மூவர் பாடிய கீவளுர் கோவிலில் வெள்ளை யடிக்கும் வேலை கிடைத்தது. மலைப்பிளவு வழியாய் வந்த பகைவர்கள் கொள்ளை யடித்தனர் கோவிலை; நானோ வெள்ளை யடித்தேன். வெள்ளையடிக்கையில் கலந்தசுண் ணாம்புநீர் கரத்தில் வழிந்ததால் வழிந்த கரத்தில் எழுந்தது கொப்புளம்.