பக்கம்:சுரதா ஓர் ஒப்பாய்வு.pdf/177

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ఫ్టణి சுரதா ஒர் ஒப்பாய்வு 173 ஆறுநாட்கள்.நான் கண்ணாம் படித்தேன். ஆறாம்நாள் மாலை அதற்குரிய கூலியாம் ஒன்றரை ரூபாய் உடனே கிடைத்தது. புதுவையை நோக்கிப் புறப்பட்ட ரயிலில் அன்றே ஏறினேன்; அடுத்தநாள் காலையில் பாண்டியில் இறங்கிப் பாவேந்தர் அவர்களைக் கண்டேன்! கண்டதும் களிப்படைந்தேனே." பாரதிதாசன் என் ஆசான் பகுதியெல்லாம் சொற்களுக்குத் தலைமை தாங்கும்; பழங்களெலாம் விதைகளுக்குத் தலைமை தாங்கும்; தகுதியெலாம் திறமைக்குத் தலைமை தாங்கும் தந்தங்கள் பற்களுக்குத் தலைமை தாங்கும் மிகுதியெலாம் நீரானால் கடலாய்த் தோன்றும் மிச்சமெலாம் அறிவானால் புகழாய்த் தோன்றும் விகுதியென நிற்காமல் பகுதி போன்று விளங்கியவர் பாவேந்தர்; அவரென் ஆசான். கற்பிப்போன் ஆசானாம்; அவனிடத்தில் கற்போனே மாணவனாம்; பண்டை நாளில் கற்பித்தோன் பெரும்புலமை பெற்றி ருந்தான் கற்றோனும் கசடறவே கல்வி கற்றான் பற்பலநாள் பாவேந்த ரோடி ருந்தும் பாடம்நான் கேட்கவில்லை; என்ற போதும் சிற்றருவி போன்றவன்யான் அவரிடத்தில் தினந்தோறும் பாட்டெழுதிக் காட்டி வந்தேன்.