பக்கம்:சுரதா ஓர் ஒப்பாய்வு.pdf/180

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

176 கவிஞர் முருகு சுந்தரம் شه வாய்ந்த அவரது சொற்கள் அச்சம் தயை தாட்சண்ய மின்றி அம்புபோல் குறிவைத்த இடத்துப் பாய்ந்து தைக்கும் வலிவுடையன. அவரது எழுத்துக்கள் எந்த நிலையிலும் தனித்தமிழ் உணர்வை, மொழிப் பற்றை, நாட்டுப் பற்றை ஊட்டிடத் தவறுவதேயில்லை. -கலைஞர் மு. கருணாநிதி பழம் பாடல்களை அறியாதவர்கள், இருபதாம் நூற்றாண்டு வடிவில் அவற்றைக் காணலாம். புதிய கருத்துக்களின் புதிய செய்யுள் வடிவத்தையும் காணலாம் செய்யுளாக இனிக்கப் பாடும் நயம் சுரதாவிடம் எளிமையில் கைவந்திருப்பதைப் பாட்டில் எங்கும் காணலாம். -பல்கலைச் செல்வர் தெ.பொ.மீனாட்சி சுந்தரனார் அரசுக் கவிஞராக இருந்த கண்ணதாசன் அவர்கள், "கவிதைத்துறையில் சுரதாஎனக்குஆசிரியர்' என்றே ஒரு முறை குறிப்பிட்டது என் நினைவுக்கு வருகிறது. ஆகவே புகழ் பெற்ற கவிஞர்களால் போற்றப்பட்டவர் சுரதா. -எஸ்.டி.சோமசுந்தரம் பி.இ. முன்னாள் தமிழக வருவாய்த்துறை அமைச்சர்