பக்கம்:சுரதா ஓர் ஒப்பாய்வு.pdf/182

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

178 கவிஞர் முருகு சுந்தரம் شه பொதுவாக இருபதாம் நூற்றாண்டுக் கவிஞர்கள் ஏதாவது, ஓர் அரசியல் அல்லது சமூக இயக்கத்தில் தம்மை ஈடுபடுத்திக் கொள்வது வழக்கம். சுரதாவுக்குத் தொடக்ககாலத்திலிருந்தே அப்படியோர் ஈடுபாடு கிடையாது. தம்மையோர் நாத்திகர் என்று கூறிக்கொள்வார்; வாழ்க்கையிலும் ஒரு நாத்திக ராகவே வாழ்ந்து கொண்டிருக்கிறார். எந்த அரசியல் கட்சியிலும் அவர் உறுப்பினர் அல்லர்; கட்சிக் கட்டுப்பாட்டில் அடங்கியிருப்பது அவரால் முடியாத செயல். ஆனால் எல்லாக் கட்சியிலும் அவருக்கு நெருங்கிய நண்பர்கள் உள்ளனர். 'மெய் விளக்கக் கவிஞர்கள் மக்க இயல்பை ஊன்றி நோக்கும் திறனாய்வாளர்களாக இருந்தார்களே அன்றி, அவ்வியல்போடு ஒன்றிவிடுபவர்களாக இல்லை. சமுதாயத்தில் உள்ள நன்மை தீமைகளைக் கண்டு உணர்ச்சி வசப்படாமல், ஒய்வு நேரப் பார்வையாளர்களாக இவர்கள் விளங்கினர். சமுதாயத்தின் நடைமுறைகள், மக்கள் வாழ்வின் ஏற்றத் தாழ்வுகள் ஆகியவற்றைப்பற்றி ஆர்வமோ, அக்கறையோ காட்டாமல் அவற்றைப் பற்றி மேற்போக்கான தம் கருத்துக்களைக் கூறும் இன்பத் தேவதைகள் இவர்கள். இவர்கள் சமுதாயத்தின் பால் காட்டுகின்ற அன்பும் வருத்தமும் ஆழமற்ற நிலையில் இருக்கும். இவர்கள் விருப்ப மெல்லாம், மற்றவர் சொல்லாதவற்றைத் தாம் சொல்ல வேண்டும் என்பதுதான்." என்று ஆங்கிலப் பேரறிஞர் சாமுவேல் ஜான்சன் குறிப்பிடுகிறார்.'