பக்கம்:சுரதா ஓர் ஒப்பாய்வு.pdf/183

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

179 சுரதா ஒர் ஒப்பாய்வு يوليو சுரதாவைப் பொறுத்தவரையில் இந்த விளக்கம் ஏறத்தாழ அவருக்குப் பொருந்துவதாக உள்ளது. சுரதாவுக்கென்று தனிப்பட்ட முறையில் எந்தக் கொள்கையும் கிடையாது. எந்த ஓர் இயக்கத்திலும் (sm)அவருக்குப் பிடிப்புக் கிடையாது. கவிதைதான் இவர் கொள்கை; இயக்கம். 'கவிஞனுக்கென்று தனிப்பட்ட இலட்சியம் இருக்க வேண்டும் என்பதில் எனக்கு நம்பிக்கை கிடையாது. அது ஒரு பித்தலாட்டம்!" என்று சுரதா வெளிப்படையாகவே பேசுவார். சுரதா உலக இயல்பையும் சமுதாய இயல்பை யும் கூர்ந்து பார்க்கிறார். அவற்றை இயல்பாகவும் சுவையாகவும் வெளிப்படுத்துகிறார். ஆனால் எந்த ஒரு குறிக்கோளுக்காகவும் வாதாடுவதில்லை; போர்க்குரல் கொடுப்பதில்லை. சில கவிஞர்கள் வாழ்நாள் முழுவதும் எழுதிக் கொண்டிருப்பார்கள். ஜெர்மன் மகாகவி கெதே தமது எண்பதாவது வயதில் தமது பெருங்காப்பியமான 'பாஸ்து 'வை எழுதி முடித்தார். பாரதிதாசனும் இறக்கும்போதுகூடத் தமது 73ஆம் வயதில் கவிதை எழுதிக்கொண்டிருந்தார். சுரதா தமது 40ஆம் வயதி லேயே கவிதை எழுதுவதை நிறுத்திக் கொண்டார். மற்றவர்கள் வற்புறுத்திப் பாடச் சொன்னால்