பக்கம்:சுரதா ஓர் ஒப்பாய்வு.pdf/185

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

181 சுரதா ஒர் ஒப்பாய்வு قواني தில்லை வில்லாளனும், அரங்கண்ணலும், மறைந்த மதியழகனும் சுரதா வீட்டுக்கு நடையாய் நடந்து கவிதையை வாங்கிச் செல்வது வழக்கம். சிலசமயங்களில் சுரதாவைக் காஞ்சிக்குக் கடத்திக் கொண்டுபோய், ஓர் அறையில் தங்கவைத்துப் பாடலை எழுதி வாங்கிக்கொண்டு அனுப்புவார் அண்ணா. அப்படி எழுதப்பட்டதுதான் 'அவன் மகன் தான் ஆள்கின்றான்' என்னும் பாடல். பாரசீகக் கவிஞர் உமர்கய்யாம் எழுதிய ருபாயியாத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த ஃபிட்ஜரால்டு, மூன்று முறை திருத்தம் செய்து அதை வெளியிட்டான். சுரதாவும் ஒரு திருத்தப் பிரியர். அவருடைய பாடல்கள் அவராலேயே திருத்தம் செய்யப்பெற்று வெவ்வேறு பத்திரிகைகளில் வரும். ஏன் என்று கேட்டால், 'திருத்தம் என் அறிவு முதிர்ச்சிக்கு அத்தாட்சி' என்று கூறுவார். சில திருத்தங்கள் சிறப்பாக இருக்கும்; சில திருத்தங்கள், ஐயோ! இப்படிச் செய்துவிட்டாரே!' என்று நாம் வருந்தும்படி இருக்கும். சுரதாவின் கவிதைப் பாணி சற்றுக் கடினமான ஒன்று. எல்லாராலும் எளிதில் பின்பற்ற முடியாத ஒன்று. ஆழ்ந்து அகன்ற கல்வியறிவும், நுட்பமான கற்பனை யாற்றலும், சிந்திக்கும் திறனும் உள்ளவர்களேசுர்தாவின் கவிதைப் பாணியில் வெற்றி