பக்கம்:சுரதா ஓர் ஒப்பாய்வு.pdf/187

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

త్థ சுரதா ஓர் ஒப்பாய்வு 183 நன்னியூர் நாவரசன், பனப்பாக்கம் சீத்தா ஆகியோரின் கவிதைகள் விட்டுவிட்டுச் சிறுதுறல் களாகப் பெய்துகொண்டிருக்கின்றன. Gug Tajlast 3,6,738,513 Lissofi (The School of Suradha Poetry)அவரோடு முடிந்துவிடும். ஆனால் அவரது பாணி, கவிதைத் துறையில் பல புதிய வாயில்களைத் திறந்துவிட்டிருக்கிறது. சொல்வதைப் புதுமையாகச் சொல்ல வேண்டும் என்னும் எண்ணத்தை இளைஞர் உள்ளத்தில் தோற்றுவித்தவர் சுரதா. படிமங்களை அடுக்கிப்பாடும் உத்தியும் (Imagism) உருவகங்களைச் செறிவாகப் பயன்படுத்தும் உத்தியும் இன்றைய புதுக்கவிதையில் விரும்பி வரவேற்கப்படுகின்றன. சுரதா மரபுக் கவிதையிலேயே இவ்வுத்திகளை வெற்றிகரமாகக் கையாண்டிருக்கிறார். நெடுந்துரம் நடந்துவந்த மரபுக்கவிதை, சுரதா என்னும் குளிர்சோலையில் தங்கி இளைப்பாறிப், புத்துணர்ச்சி பெற்றுத் தன் புதிய பயணத்தைத் தொடர்ந்தது என்று சொல்லலாம். சுரதாவுக்குப் பிற மொழி இலக்கியப் பயிற்சி இல்லை. மேலைநாடுகளின் கவிதை வளர்ச்சியைப் பற்றி அறிந்திருந்தால்,அவருடைய வளர்ச்சி இன்னும் வியக்கத்தக்கதாக இருந்திருக்கும். இடைக்காலத் தமிழ்ப் பிரபந்தங்களிலேயே அவர் எண்ணங்கள் சுற்றிச் சுற்றி வருகின்றன.