பக்கம்:சுரதா ஓர் ஒப்பாய்வு.pdf/189

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ు சுரதா ஓர் ஒப்பாய்வு 185 நூலாசிரியர் கவிஞர் முருகு சுந்தரம் கவிஞர் முருகு, கால் நூற்றாண்டுக்கும் மேலாகக் கவிஞர் கரதாவோடு நெருங்கிப் பழகியவர்; நண்பர்; சுவைஞர். சுரதா வின் இகவாழ்க்கையையும், இலக்கிய வாழ்க்கையையும் நன்கு அறிந்து அணு அணுவாகச் சுவைத்தவர்; சுரதாவைத் தொட்டுப் பார்த்து, அடிக்கடி அவர் நாடித் துடிப்பைக் கற்று அறிந்தவர். பனித்துளிகள், கடைத்திறப்பு, தீர்த்தக் கரையினிலே, எரி நட்சத்திரம், சந்தனப் பேழை, வெள்ளை யானை, புகழ்பெற்ற புது க் கவிஞர்கள், பாவேந்தர் ஒரு பல்கலைக் கழகம், குயில்களும் இளவேனில் களும் என்னும் இலக்கியச் செல்வங்களைத் தமிழுக்கு ஈந்தவர். தமிழக அரசு பாவேந்தர் விருதையும், நல்லாசிரியர் விருதையும் இவருக்கு வழங்கியது. தமிழ் வளர்ச்சிக் கழகம் இவரது பனித்துளிகளுக்குக் கவிதைக் குரிய முதல் பரிசை 1981 ஆம் ஆண்டு வழங்கிச் சிறப்பித்தது. -சேலத்துக் கவிஞர் முருகு சுந்தரம் அரசியல் தலைவர்கள் அத்தனைபேரும் அறிஞர்கள் ஆவதில்லை - கவி வரிசையில் நிற்பவர் அத்தனை பேரும் வான்புகழ் பெறுவ தில்லை. முத்தமிழ்ச் சிந்தனை முருகு கந்தரம் முத்தாரக் கவிஞர் - அவர் பத்துப் பாட்டைப் போலப் பாடல் படைக்கும் நற் கவிஞர். -சுரதா