பக்கம்:சுரதா ஓர் ஒப்பாய்வு.pdf/37

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

| சுரதா ஓர் ஒப்பாய்வு 33 4. சுரதா அரும்பிய நேரம் தமிழ்க் கவிதையின் உள்ளடக்கத்திலும், உருவத்திலும், உத்தியிலும் பெரிய மாறுதல்களைக் கொண்டு வந்தவன் பாரதி. பாரதி இருபதாம் நூற்றாண்டுக் கவிதையின் முதற்பாகம், பாரதிதாசன் இரண்டாம் பாகம், சுரதா மூன்றாம் பாகம். கவிஞர் நாமக்கல் இராமலிங்கம் பிள்ளை பாரதியின் நிழல்; தேசிய விநாயகம் பிள்ளை, சது.க. யோகி, சுத்தானந்த பாரதி மூவரும் பாரதியின் அங்கங்கள். சுரதா எழுதத் தொடங்கிய நேரம் தமிழக அரசியலிலும் இலக்கியத்திலும், முக்கியமான காலகட்டம், அரசியலில் திராவிட இயக்கமும், இலக்கியத்தில் திராவிடப் பண்பாடும் காலூன்றத் தொடங்கிய நேரம். திராவிடப் பண்பாட்டு எழுச்சி, இளைஞர் உள்ளத்தில் கொழுந்துவிடத் தொடங்கியது. திராவிட இயக்கம் தனது வளர்ச்சிக்குச் சில அரசியல் சமுதாயக் காரணங்களை அடிப்படையாகக் சு - 3