பக்கம்:சுரதா ஓர் ஒப்பாய்வு.pdf/39

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தி சுரதா ஓர் ஒப்பாய்வு 35 ஈட்டி முனைகளாக விளங்கினர். பேரறிஞர் அண்ணா தளபதியாக விளங்கினார். அண்ணாவின் பேச்சும் எழுத்தும் தென்றலாக, தேனருவியாக, புயலாக, பூகம்பமாகத் தமிழகத்தை வளைத்துக் கொண்ட நேரம். இதற்குமுன் கேட்டிராத ஒரு புதிய நாதம் அவர் பேச்சில்! இதற்குமுன் கண்டிராத கிழக்கும் மேற்கும் பின்னிப் பிணைந்த சிந்தனைச் சிதறல் அவர் எழுத்தில் அவர்நடையோ, பூக்கள் பரப்பிய மெத்தென்ற சிங்கார நடை. திராவிட நாடு' என்ற வார இதழ் அவரது போர்வாள்! விடுதலை, குடியரச், திராவிடன், மன்றம், புதுவாழ்வு, தனியரசு என்று திரும்பிய பக்கமெல்லாம் திராவிட இயக்க ஏடுகள். கலைஞரும் கண்ணதாசனும் போட்டி போட்டுக்கொண்டு முரசொலியையும் தென்றலையும் நடத்தினர். புதுக்கோட்டையிலிருந்து 'பொன்னி' என்ற இலக்கிய ஏடு பாரதிதாசன்பரம்பரையொன்றைக் கவிதைத் துறையில் உருவாக்கிக் கொண்டிருந்தது. எல்லா ஏடுகளிலும் வெண்பாப் போட்டிகள்! அண்ணா, கவிதைக்கு முதலிடங் கொடுத்து திராவிட நாட்டின் முதல் பக்கத்தில், வாரந்தோறும் வெளி யிட்டார். அவரைத் தொடர்ந்து இயக்கத்தின் எல்லா ஏடுகளும் முன்பக்கத்தில் கவிதை வெளியிடுவதை