பக்கம்:சுரதா ஓர் ஒப்பாய்வு.pdf/40

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 கவிஞர் முருகு சுந்தரம் شه மரபாகக் கொண்டன. பாரதிதாசன், ‘குயில் என்ற பெயரில் தரமான கவிதை ஏடு ஒன்றைத் தொடங்கித் தொடர்ந்து நடத்தி வந்தார். நாவலர் பாரதியும், தமிழறிஞர் இரா.பி. சேதுப்பிள்ளையும் அண்ணாவோடு கம்பராமாயணச் சொற்போர் நிகழ்த்தித் தோற்றனர். 'தென்றல்’, ஏட்டில், தாலி அணிவது தமிழர் மரபா? என்ற பரபரப்பான தலைப்பில் தமிழறிஞர்கள் சூடாக விவாதித்தனர். 'பொங்கல் விழா தமிழர் விழாவாகப் புதுப்பொலிவும் புது மரியாதையும் பெற்றுச்சிறந்தது. பொங்கல் வாழ்த்து அனுப்பும் பழக்கம் விளம்பரப் படுத்தப்பட்டது. பாரதிதாசன் என்னும் புதிய சகாப்தம் தோன்றியது. புதிய தமது தசாங்கத்தோடு, தமது ஆளுகைக்குட்பட்ட கவிதை இராச்சியத்தில் உலா வரத் தொடங்கிவிட்டார் பாரதிதாசன். அவருக்கென்று தனிப்பரிவாரம் தோன்றிவிட்டது. அவருடைய கொடி உயரப் பறக்கத் தொடங்கியது. பாரதிதாசன் கடந்த நாற்பதாம், ஐம்பதாம் ஆண்டுக் காலக் கட்டத்தில் இடிமுழக்கமாக, புயலாக, கொடி மின்னலாகக் கவிதை வானில் ஆற்றலோடு வெளிப்பட்டார். அவருடைய பாட்டு வரிகள் மோசஸின் பத்துக்